வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி.. 7 மாவட்டங்களில் இடி, மின்னல், மழை..!!

Published : Dec 18, 2020, 12:58 PM IST
வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி.. 7 மாவட்டங்களில் இடி, மின்னல், மழை..!!

சுருக்கம்

குமரி கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குமரி கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. 

அடுத்த 48 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு நாட்களுக்கு தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்சும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்சையும் ஒட்டியிருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புவனகிரி (கடலூர்) 11 சென்டி மீட்டர் மழையும், பரமக்குடி (ராமநாதபுரம்) பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 7 சென்டிமீட்டர் மழையும், இளையான்குடி (சிவகங்கை) குடவாசல் (திருவாரூர்) தலா 6 சென்டி மீட்டர் மழையும், அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) மயிலாடுதுறை தலா 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை இன்றுவரை இயல்பை விட 9 விழுக்காடு கூடுதலாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!