முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்..!

By vinoth kumar  |  First Published Jul 14, 2023, 7:05 AM IST

கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி அன்பழகன். தர்மபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். 


அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி அன்பழகன். தர்மபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். இவர் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த காலக்கட்டமான 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ரூ.45.20 கோடி சொத்து தொடர்பான இந்த வழக்கில் கே.பி.அன்பழகன், அவர் மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திர மோகன் மற்றும் உறவினர்கள் என 11 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- தமிழக முதல்வராக மட்டுமல்ல.. தந்தையின் இடத்திலிருந்து சொல்கிறேன்.. உணர்ச்சி பொங்க பேசிய மு.க.ஸ்டாலின்.!

இந்த வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் 22-ம் தேதி போலீசார் தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 10,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேதியாக ஜூலை 13-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க;-  அதிமுக முன்னாள் அமைச்சர்களை குற்றவாளிகள் என்று சொல்வதா? அப்படினா செந்தில்பாலாஜி? கண்சிவக்கும் இபிஎஸ்..!

இந்நிலையில், இந்த வழக்கு தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு இனிமேல் முதன்மை அமர்வு நீதிமன்றம் மூலம் விசாரணை நடைபெற உள்ளது.

click me!