அதிமுக எதிராக புது அஸ்திரத்தை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்.. டிசம்பர் 23-ம் தேதியில் இருந்து பிரச்சாரம்..!

By vinoth kumarFirst Published Dec 20, 2020, 11:45 AM IST
Highlights

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 23-ம் தேதியிலிருந்து இருந்து நேரடி பரப்புரையில் ஈடுபட உள்ளார் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 23-ம் தேதியிலிருந்து இருந்து நேரடி பரப்புரையில் ஈடுபட உள்ளார் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

தமிழக சட்டசப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் திமுக மாவட்ட, மாநகர செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டம் முடிந்ததும் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்பதால் ஏராளமான தொண்டர்கள் அண்ணா அறிவாலய வளாகத்தில் குவித்துள்ளனர்.

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகையில்;- திமுக ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு போர்க்குரலை அறிவிக்க உள்ளார். டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. தனது பரப்புரையில் 16,000 கிராம சபை கூட்டங்களை நடத்தி நிர்வாகிகளை ஸ்டாலின் சந்திக்க உள்ளார். 

அதேபோல், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் திமுகவின் தேர்தல் பரப்புரை வீடியோ வெளியிடப்பட்டது. அதிமுகவை நிராகரிக்கிறோம் என கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசுக்கு எதிராக திமுகவினர் ஆன்லைன் மூலம் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்க வேண்டும் என தலைமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

click me!