முதல்வர் அறிவிப்பை மிஞ்சும் வகையில் இன்று காலை 10 மணிக்கு ஸ்டாலின் வெளியிட போகும் மாபெரும் அறிவிப்பு...!

By vinoth kumarFirst Published Dec 20, 2020, 9:42 AM IST
Highlights

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு மாபெரும் ஒரு அறிவிப்பு வெளியிட உள்ளார் என திமுகவின் பேஸ்புக் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு மாபெரும் ஒரு அறிவிப்பு வெளியிட உள்ளார் என திமுகவின் பேஸ்புக் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன. இதனால் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முறைப்படி தொடங்கினார். 

பிரசாரத்தை தொடங்கிய முதல் நாளிலேயே, அதிரடியாக, அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்போர் ஒவ்வொருவருக்கும் தலா 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். முதல்வர் அறிவிப்பை, சமூக வலைதளங்களில், வரவேற்று ஏராளமானோர் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர். இது, திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். கொரோனா காலத்தில் 5000 ரூபாய் கேட்ட போது வழங்க மறுத்த முதல்வர் தனது சுயநலத்திற்காக, தேர்தல் ஆதாயத்துக்காக இப்போது இந்த நிதி உதவியை அறிவித்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது என கூறியிருந்தார். 

இதனிடையே முதல்வர் நேற்று பிரசாரத்தை தொடங்கிய முதல் நாளிலேயே அதிரடி அறிவிப்பு வெளியிட்டதால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் திமுக பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திமுக முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: டிசம்பர் 20ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, தலைவர் ஸ்டாலின் ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட உள்ளார். காத்திருங்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் என்ன அறிவிப்பு வெளியிட போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. 

click me!