ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள அதிமுக தீவிரம்... கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்!

By vinoth kumarFirst Published Nov 5, 2018, 10:27 AM IST
Highlights

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை போல் நடந்து விடக்கூடாது மற்றும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.  இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவினர் பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்து வருகின்றனர். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை போல் நடந்து விடக்கூடாது மற்றும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.   இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவினர் பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்து வருகின்றனர். 

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விரைவில் நடைபெற உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் விவரம்;

* அரவக்குறிச்சி தொகுதிக்கு எம்ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன். 

* திருவாரூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.ஜீவானந்தம், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆசைமணி. 

* பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்கு கொள்கைபரப்பு துணை செயலாளர் செ.ம.வேலுசாமி, அமைப்பு செயலாளர் ப.மோகன்.

* திருப்போரூர் தொகுதிக்கு மீனவர் அணி செயலாளர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி, அமைப்புசாரா ஒட்டுநர்கள் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* மானாமதுரை தனி தொகுதிக்கு அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, பெரம்பூர் தொகுதி பொறுப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

* ஒட்டப்பிடாரம் தனி தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளரான செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* அமைப்பு செயலாளரும், எம்எல்ஏவுமான எஸ்.பி.சண்முகநாதன் விளாத்திக்குளம் தொகுதியில் இருந்து ஒட்டப்பிடாரம்(தனி) தொகுதிக்கு பொறுப்பாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

click me!