அரசு போட்ட அதிரடி உத்தரவு.. இன்று காலை முதல் சென்னையில் 2,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்க தொடங்கியது.

Published : Dec 08, 2020, 01:06 PM IST
அரசு போட்ட அதிரடி உத்தரவு.. இன்று காலை முதல் சென்னையில்  2,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்க தொடங்கியது.

சுருக்கம்

மேலும், COVID-19 நோய்த் தொற்று காலங்களில், 60% பயணிகள் மட்டுமே பேருந்துகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவித்திருந்த உத்தரவினை தளர்த்தி, 100% பயணிகள் பயணத்திட நேற்றைய தினம் தமிழ்நாடு அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,  

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், பொதுமக்களுக்காக இயக்கப்பட்டு வரும், 2,500க்கும் மேற்பட்ட பேருந்துகள், இன்று (08.12.2020) காலை முதல் வழக்கம்போல தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. 

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதை அடுத்து 100% இருக்கைகளுடன் பேருந்து இயக்க அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், முதலில் 60 சதவீத இருக்கைகளுடன் பொது போக்குவரத்து இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டாவது உத்தரவில் 7-9- 2010 முதல் மாநிலம் முழுவதும் பொதுப்போக்குவரத்து இயக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் பள்ளி கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 100% இருக்கைகளுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் பேருந்துகளை இயக்குவதற்கும், தேவையின் அடிப்படையில் பேருந்துகளின்  எண்ணிக்கையை அதிகரிக்கவும் அனுமதிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக, 32 பணிமனைகளைச் சார்ந்த அனைத்துப் பணியாளர்களும் வழக்கம் போல பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், COVID-19 நோய்த் தொற்று காலங்களில், 60% பயணிகள் மட்டுமே பேருந்துகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவித்திருந்த உத்தரவினை தளர்த்தி, 100% பயணிகள் பயணத்திட நேற்றைய தினம் தமிழ்நாடு அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதனடிப்படையில், அரசின் நிலையான வழிக்காட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணிகள் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். 

 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!
ஹமாஸை ஒழிப்பதில் நாங்களே தலைமை தாங்குவோம்.. அமெரிக்காவிடம் அடம்பிடிக்கும் பாகிஸ்தான் இராணுவம்..!