காந்தி சிலை அருகே ஆசியாவின் மிகப் பெரிய மதுக்கடை !! பொது மக்கள் அதிர்ச்சி !!

By Selvanayagam PFirst Published Jul 3, 2019, 11:00 AM IST
Highlights

பெங்களூருவில் காந்தி சிலை அருகே ஆசியாவிலேயே மிகப் பெரிய மதுக்கடை அடைக்கப்பட உள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்
 

மதுப்பழக்கத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவர் மகாத்மா காந்தி. எனவேதான் அவரது பிறந்தநாளில் மதுக்கடைகளை மூடவேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி அன்று ஒரு நாள் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காந்தி சிலை அருகே ஆசியாவிலேயே மிக பெரிய மதுபான கடை அமைய உள்ளது.

பெங்களுரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம் அருகிலுள்ள காந்தி சிலை அருகே இந்த  மதுபான கடை அமைய உள்ளது. இதையறிந்த சமூக ஆர்வலர் கே.எல்.சுரேஷ், இந்த மதுபான கடைக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. இதை முடக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல், காந்தி சிலைக்கு அருகே மதுபான கடை அமைவதற்கு பலரும் தங்களது கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 

மதுக்கடையை எதிர்த்து பொது மக்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.

click me!