ஜெயலலிதாவுக்கு நம்மையும் மிஞ்சிய விசுவாசிகள் இருக்கிறார்களா? மோடி தொகுதியான காசியில் பூங்குன்றனை மெய்சிலிர்க்கவைத்த தொண்டன்...

By sathish kFirst Published Jul 3, 2019, 10:51 AM IST
Highlights

மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு உயிரையும் துச்சமாக நினைக்கும் விசுவாசமான தொண்டர்கள் இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கிறார்கள். மோடியின் தொகுதியான காசி (வாரணாசி)யில், ஶ்ரீ குமாரசுவாமி மடத்திற்கு சென்றிருந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனை மே சிலிர்க்க வைத்த தொண்டனைப் பற்றி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு உயிரையும் துச்சமாக நினைக்கும் விசுவாசமான தொண்டர்கள் இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கிறார்கள். மோடியின் தொகுதியான காசி (வாரணாசி)யில், ஶ்ரீ குமாரசுவாமி மடத்திற்கு சென்றிருந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனை மே சிலிர்க்க வைத்த தொண்டனைப் பற்றி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில்; தொண்டர் என்றால் என்ன அர்த்தம் என்று தேடிய போது, ஒரு கட்சியிலோ அல்லது பொதுநல அமைப்பிலோ ஊதியம் இல்லாமல் பணி செய்பவர் என்று வந்தது. அப்படி தன்னமில்லா தொண்டர்களின் இயக்கத்தால், கழகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. 

காசி (வாரணாசி), ஶ்ரீ குமாரசுவாமி மடத்திலிருந்து வெளியே வந்தால், நம் புரட்சித்தலைவி படம். பார்த்தவுடன் ஒரு பரவசம். அதுவும் காசியில் என்ற போது, மனம் கலங்கிதான் போனது.

குமாரசுவாமி மடத்தின் மேலாளர் திரு. ராஜா அவர்களிடம் விசாரித்த போது, அவர் பெயர் சங்கர். அஇஅதிமுக-காரர். அம்மா மீது அளவற்ற பக்தி கொண்டவர். அம்மா இறந்த போது, சங்கர் சென்னை வர துடித்ததாகவும், நாங்கள் தான் கூட்டத்தில் உங்களால் சென்று பார்க்க முடியாது என்று சொன்னதாகவும், கவலை அடைந்த சங்கர், அம்மா படத்தை கடை வாசலில் வைத்து, மாலை அணிவித்து, அதன் அருகில் அமர்ந்து அழுது, எங்களையே கலங்க வைத்துவிட்டார் என்றும் தெரிவித்தார்.

காசி குமாரசுவாமி மடத்தின் வாசலில், ‘காசி விஷ்வநாதர் உணவகம், நடத்தி வருகிறார். உணவகத்தின் வாசலில் தான், நம் தங்கத்தாரகை அம்மா படம். 

ஆவலோடு, ‘விசுவாசம்’ கொண்ட உடன்பிறப்பு சங்கரிடம் சென்று பேசினோம். தனது சொந்த ஊர் விழுப்புரம் என்றும், காசி வந்து முப்பது வருடங்கள் ஆவதாகவும் குறிப்பிட்டார்.

தான் ஆற்றிய கழகப் பணிகளை பற்றி ஆர்வத்தோடு பகிர்ந்தார். புரட்சித்தலைவரை பார்ப்பதற்கு விழுப்புரம், கண்டமங்கலத்திலிருந்து, 101 சைக்கிளில் சென்னை வந்த போது, காவல்துறை தடியடி நடத்தியதில் மண்டை உடைந்ததை காட்டுகிறார். மேலும், இங்கு பேருந்து வைத்து புனித பயணங்களுக்கு பக்தர்களை அழைத்து சென்று வருவதாகவும், பேருந்தில் அம்மா படம், இரட்டை இலை வரைந்து வட மாநிலங்களில், புனித யாத்திரையின் போது பயன்படுத்தியதை சொல்லி பெருமிதம் கொள்கிறார். 

ஒருமுறை பேருந்தில், பக்தர்களை யாத்திரை அழைத்து சென்ற போது, வெயில் கொடுமையால் குளிர்சாதன வசதியை, தமிழகத்திலிருந்து வந்திருந்த பக்தர்கள் கேட்ட போது, இரட்டை இலைக்கு வாக்களிக்க ஒத்துக் கொண்டால், இலவசமாக பத்து நாளும் பயன்படுத்தலாம் என்று சொன்னாராம். ஒருவரைத் தவிர மற்ற பயணிகள் ஒத்துக்கொண்டார்கள் என்று சந்தோஷப்பட்டதோடு, சொன்னபடி இலவசமாக குளிர்சாதன வசதியை பத்து நாட்கள் கொடுத்ததாக சொல்லி மகிழ்கிறார். உணவகத்தில் அதிமுக-காரன் என்று சொல்லிவிட்டால், சாப்பாடும் இலவசமாக தந்துவிடுவேன் என்று உணர்ச்சிவசப்படுகிறார். இப்போதும், இங்கிருந்து கொண்டு கட்சிப்பணிகள் ஆற்றி வருவதாக தெரிவித்தார். கட்சியைப் பற்றி பேசும் போது உற்சாகமும், ஆனந்தமும் அவருக்கு தானாகவே வந்துவிடுகிறது. 

மரியாதைக்குரிய சங்கர், அம்மா அவர்களுக்கு கோயில் கட்டுவேன் என்றார். எங்கு விழுப்புரத்திலா? என்று நான் கேட்டேன். இல்லை, இல்லை காசியில் என்றார். வியப்போடு நான். இங்கிருந்து விடைபெறுவதற்குள் கட்டாயம் அம்மாவுக்கு கோயில் கட்டுவேன் என்று ஆணித்தரமாக சொன்ன, அந்த கழகத் தொண்டரை பார்த்து, உங்களைப் போன்ற விசுவாசமிக்க, உண்மை தொண்டர்களால் தான் கட்சி வாழ்கின்றது, என்று நான் சொன்ன போது, விழியோரங்களில் கண்ணீர் பூக்கள் மலர்ந்தன. தமிழ் வாழும் இடங்களில், நம் இதயதெய்வம் புரட்சித்தலைவியும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதே நிதர்சனம். 

அம்மாவிடம் பணியாற்றினேன் என்பதற்காக, காலையும், மதியமும் எங்களுக்கு விருந்து கொடுத்து மகிழ்ந்தார்கள். ‘விசுவாசமே எங்கள் சுவாசம்’ என்று வாழும் தன்நலமில்லா தொண்டன் வாழ்க! வாழ்க! 

click me!