ஏசியா நெட் நியூஸ் -ன் மெகா மகா சர்வே! தமிழகத்தை அடுத்து ஆளப்போது யார்?

First Published Jul 26, 2018, 4:03 PM IST
Highlights
Asianet news tamil Opinion Poll


தமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கருணாநிதியின் ஆக்டிவ்வானா அரசியல் இல்லாத நிலையில் மிகப்பெரிய அரசு வெற்றிடம் உருவாகி உள்ளதாக பலர் கூறி வருகின்றனர். 

உண்மையில் அப்படியோரு அரசியல் வெற்றிட சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா? இல்லை வழக்கம்போல கிளப்பிவிடப்படும் கட்டுக்கதைகளா?

மேலும் 18 எம்எல்ஏக்கள் வழக்கு ஒரு பக்கம், இதனால் நிலவும் அரசியல் ஸ்தரமற்ற நிலையில் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக ஏசியா நெட் தமிழ் டாட்காம் சார்பில் தமிழகத்தில் உண்மையாக அரசியல் நிலவரம் என்ன? யாருக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது? அடுத்து ஆளப்போவது யார்? என்பது குறித்து எல்லாம் விரிவாக கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. 

ஜூலை 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள, அனைத்து பகுதிகளுக்கும் நமது குழுவினர் சென்று, அறிவியில் ரீதியான கருத்து கணிப்புகளை நடத்தினர். 

மொத்தம் 11,691 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் சுமார் 25-க்கும் மேற்பட்ட சாதியினர் மற்றும் மதத்தினரிடம் சரி விகிதத்தில் விரிவாக கேள்விகள் எழுப்பப்பட்டது. தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து சர்வே மேற்கொள்ளப்பட்டது. 

கீழ்க்கண்ட தலைப்புகளில் விஞ்ஞான ரீதியான சர்வே மேற்கொள்ளப்பட்டது

* 2019 தேர்தலுக்கான கட்சிகள் பெறும் வாக்கு சதவீதம்?

* ஜாதி ரீதியாக கட்சிகளின் பலம்?

* யாருடன் கூட்டணி வைத்தால் யாருக்கு பலம்?

* சில கட்சிகளுக்கு வாக்கு அளிக்காதது ஏன்?

* தொகுதியின் அடிப்படை பிரச்சனைகள்

* தமிழகத்தில் அரசியல் வெற்றிடமா? தற்போதைய அரசியல் நிலவரம் என்ன?

* தினகரனின் பலம் என்ன?

* தமிழகத்தின் போராட்டங்கள் குறித்த கருத்துக்கள்?

* தமிழகத்தில் நிலமையை சமாளிப்பவர் யார்?... அதிமுகவா?  திமுகவா? 

* ரஜினி, கமல் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துவார்களா?

* மோடி-ரஜினி கூட்டணிகளை ஏற்பிற்களா?

* ரஜினி தனியாக நின்றால் வெற்றி பெறுவாரா?

* எனக்கு பிடித்த தலைவர் யார்?

* தற்போதைய தமிழக அரசு குறித்து மதிப்பீடு?

* தற்போதைய மத்திய அரசு குறித்து மதிப்பீடு?

* மீண்டும் மோடி பிரதமராகலாமா?

* பிரதமருக்கான தேர்வு இவறா?

என்பவன உள்ளிட்ட பல கோணங்களில் சர்வே எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 26-ம் தேதி முதல் சர்வே முடிவுகள் அரசியல் நிபுணர்களின் கருத்துக்கள், சிறு விவாதங்கள் என தொடர்ந்து சர்வே முடிவுகள் குறித்து ஏசியா நெட் ஆன்லைன் தமிழில் காணலாம்.

click me!