பிரதமர் மோடி, அமித் ஷாவின் புதுச்சேரி விசிட் செம சக்ஸஸ்..! சர்வேயில் வெளிவந்த உண்மை

By karthikeyan VFirst Published Mar 16, 2021, 8:44 PM IST
Highlights

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமித் ஷாவின் புதுச்சேரி வருகை, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றிருப்பதை சர்வே வெளிக்காட்டியுள்ளது.
 

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. புதுச்சேரியில் ஆட்சியமைக்கும் தீவிரத்தில், கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரியில் தீவிர களப்பணியாற்றிவருகிறது பாஜக. 

இந்நிலையில், இந்த சட்டமன்ற தேர்தலை பாஜக, அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியமைத்து வலுவான கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் இழந்துவிட்ட நிலையில், பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதை உறுதி செய்துள்ளது சர்வே.

ஏசியாநெட் நியூஸ் மற்றும் சி ஃபோர் நிறுவனம் இணைந்து புதுச்சேரியில் மார்ச் 5 முதல் 12 வரை 5077 வாக்காளர்களிடம் பல்வேறு கேள்விகளுடன் கருத்து கேட்டது. அந்த கருத்து கணிப்பில், 52% பேர் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 36% பேர் மட்டுமே திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம், 23-27 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கும் என்று சர்வே தெரிவிக்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி வெறும் 3-7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று சர்வே தெரிவிக்கிறது.

இந்த சர்வேயில், பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை, புதுச்சேரிக்கான பிரதமர் மோடியின் திட்டங்கள் மற்றும் அமித் ஷாவின் காரைக்கால் பிரச்சார பேரணி ஆகியவை குறித்து மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் புதுச்சேரி வருகை செம சக்ஸஸ் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி கடந்த மாதம் புதுச்சேரி சென்று, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்ததுடன், முடிவடைந்த திட்டங்களை திறந்தும்வைத்தார். பிரதமர் மோடியின் அந்த வருகை குறித்து கேள்விப்பட்டீர்களா என்ற கேள்விக்கு 65% பேர் ஆம் என்றும் 35% பேர் இல்லை என்றும் தெரிவித்தனர்.

புதுச்சேரியின் தொழில், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா ஆகிய துறைகளின் வளர்ச்சிக்கான பிரதமர் மோடியின் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு ஆம் என்று 48% பேரும், இல்லை என்று 5% பேரும், கருத்து இல்லை என்று 47% பேரும் கருத்து தெரிவித்தனர்.

அமித் ஷாவின் காரைக்கால் பேரணி பெரும் வெற்றி என்று 56% பேரும், கருத்து இல்லை என்று 35% பேரும், இல்லை என்று 9% பேரும் கருத்து தெரிவித்தனர்.

பிரதமர் மோடியின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளும் விதமாக கேட்கப்பட்ட கேள்விக்கு, உஜ்வாலா கேஸ் திட்டம் பற்றி தெரியும் என்று 21% பேரும், ஜன் தன் வங்கிக்கணக்கு திட்டம் பற்றி 23% பேரும், முத்ரா லோன் குறித்து 16% பேரும் தெரியும் என்று கருத்து தெரிவித்தனர்.
 

click me!