தமிழகத்தை தொடர்ந்து தாக்கும் கொரோனா.. 2 திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா... அரசியல் வட்டாரங்கள் அதிர்ச்சி

By Raghupati R  |  First Published Jan 17, 2022, 7:47 AM IST

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மேலும் 2 திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் வரை தினசரி கேஸ்கள் 2000க்கும் கீழ்தான் பதிவாகி வந்தது. இந்த நிலையில் ஓமிக்ரான் கேஸ்கள் பரவ தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் புதிய உச்சம் தொட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த துரை சந்திரசேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும்,பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர். டி .சேகர் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார். 

இந்த சூழ்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது மனைவிக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!