
பாலியல் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என்று தமது மாணவிகளைக் கட்டாயப்படுத்தும் குரல் பதிவு வெளியான நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடம் காவல்துறையினர் விடிய விடிய நடந்த விசாரணை விசாரணையைத் தொடர்ந்து, பேராசிரியை நிர்மலா தேவியிடமிருந்து மூன்று செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் உயரதிகாரிகளின் செல்போன் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மற்றொரு செல்போனில் நிறைய கல்லூரி பெண் புகைப்படங்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கைப்பற்றப்பட்ட செல்போனில் உள்ள எண்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மார்ச் 14ம் தேதி 4 கல்லூரி மாணவிகளை சில பெரிய மனிதர்களுக்கு பாலியல் ரீதியாக படுக்கைக்கு அனுப்ப வற்புறுத்தி தொலைபேசியில் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியானதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் 4 மாணவிகள் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் நிர்மலா தேவியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது. மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில்நேற்று பேராசிரியை நிர்மலா கைது செய்யப்பட்டார். 19நிமிட உரையாடலை நொடிக்கு நொடி அலசல்...
நேற்று கைது செய்யப்பட்டதிலிருந்து விடிய விடிய நடந்த விசாரணையில் முதலில் நிர்மலாதேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோவை நொடிக்கு நொடி தவாராமல்கேட்டனர்.
நிர்மலாதேவியிடம், அவர் பேசிய ஆடியோவிளிருந்தே கேள்விகளை துருவித் துருவி கேட்டுள்ளனர். மாணவிகளிடம் பேசும்போது, 110 பேர் அங்கு செயல்படுகிறார்கள், என்னைப்போல் 400 பேர் இதற்காக செயல்படுகிறார்கள், ஆளுநர் மீட்டிங்கில் நான் அருகில் சென்று வீடியோ பிடிக்கும் அளவுக்கு எனக்கு செல்வாக்கு இருக்கிறது உங்களுக்கு தெரியும் என தனக்கு எவ்வளவு கெத்து இருக்கிறது என்று பேசியிருந்தார்.
மேற்படிப்பு படிக்க ஆசையில்லை அரசுத் துறையில் தேர்வு எழுதப்போகிறோம் என்று மாணவிகள் தட்டிக்கழித்தாலும், உங்களுக்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்து தருகிறேன், இந்த டிஎன்பிஎஸ்சி எல்லாம் எனக்கு சாதாரணம். ஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்கவும் ஏற்பாடு செய்து தருகிறேன். பணம் உங்க அக்கவுண்டுக்கு வரும் என தனது செல்வாக்கை மாணவிகளிடம் விவரிக்கிறார். அப்படியென்றால் இது எவ்வளவு பெரிய நெட்வொர்க்? கல்வித்துறையில் இருக்கும் ஒட்டுமொத்த பெரிய மனிதர்களுக்கு இப்படி பெண்களை கட்டிலுக்கு அனுப்புகிறாரா? என கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டதாம்.
“விஐபி பேரைக்கேட்டாலே நீங்களே தானா வந்துடுவீங்க”
நொடிக்கு நொடி நீங்கள் அட்ஜெஸ்ட் செய்தால் போதும் நான் பார்த்துகொள்கிறேன் என சொன்னாலும், அந்த மாணவி இல்ல மேம்.. இது எங்களுக்கு செட் ஆகாது மேம்.. இஷ்டம் இல்ல மேம் என ஒத்துக்கொள்ளவில்லை என்றவுடன், தனக்கு பெரிய லெவலில் தொடர்பு உள்ளது, உங்களுடைய எதிர்காலம் சொர்க்கமாக இருக்கும் என்றும், நான் சொல்லும் விஐபி பேரைக்கேட்டால் அப்புறம் நீங்களே தானே வந்துவிடுவீர்கள் நாக்கு கூசாமல் இப்படி பேசியிருக்கிறார்.
ஒரு பல்கலைகழகத்தில் பணியாற்றும் பேராசிரியை, மாணவிகளை இப்படி தில்லாக தனக்குப் பின்னால் பெரிய பெரிய விவிஐபிகள் இருக்கிறார்கள் என தெனாவட்டாக படிக்கும் பெண்களை படுக்கைக்கு தள்ள முயற்சிப்பதைப் பார்த்தால் நிர்மலா தேவி வெறும் அம்புதான். இவருக்குப் பின்னால் மிகப்பெரிய நெட் ஒர்க் இருப்பது சந்தேகமில்லை.
“ஆளுநர் லெவலில் ஆளு இருக்கு”
ஆளுநர் லெவலில் தெரியும் – இப்படி ஒரு பெண் மாணவிகளிடம் சொல்கிறார் என்றால் ஒரு பெரும் கிரிமினல் வலைப்பின்னலாகத் தெரிகிறது. பேராசிரியை ஒருவர், பாலியல் தரகர் நிலைக்கு இறங்கி, மாணவிகளுக்குப் பாலியல் வலை வீசியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். இது அவர் ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயமாகத் தோன்றவில்லை. ஆளுநர், அவரது அலுவலகம் மற்றும் தமிழக உயர் கல்வித் துறை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கக்கூடும் என்ற வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது எதிர்கட்சிகள்.
அதே சமயத்தில், நிர்மலா தேவி ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறார். அவரைப் பின்னணியில் இயக்கியவர்கள் உயர் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு உள்ளவர்களாக இருப்பதாகவே தெரிகிறது.தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால் அந்த விஐபிக்கள் யார் யார் இந்த நெட்வொர்க்கில் இருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகுமா? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்