பா.ஜ.க செல்வாக்கை அட்டை கத்தியாக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்.!! சாமனா நாளிதழ் தலையங்கம்

By Thiraviaraj RMFirst Published Feb 17, 2020, 9:42 AM IST
Highlights

பிரதமர் மோடிக்கும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான பொதுவான அம்சம் ,இருவரும் சுயநலவாதிகள் என்பது தான். ஆனால் மோடிக்கு பெரும் ஆணவமும் உள்ளது.

T>Balamurukan

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழ்ளான "சாம்னா"வில் எழுதப்பட்ட தலையங்கத்தில் மோடியும்,அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல,இதற்கு உதாரணம் டெல்லி தேர்தலில் கெஜ்ரிவால் பெற்ற வெற்றியை மையமாக வைத்து அந்த தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது.
அந்த தலையங்கத்தின் முக்கியமான சில கருத்துக்கள் இதோ..,

  "பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா வெல்ல முடியாத கட்சியாக தோன்றியது.  டெல்லி சட்டசபை தேர்தலில் அந்த கட்சி ஒரு அட்டை வீடு போல சரிந்துவிட்டது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா ராமரைத்தான்  முன்னிறுத்தியது. அனுமனை வழிபடும் கெஜ்ரிவால் டெல்லியில் ராம ராஜ்யத்தை கொண்டு வந்து உள்ளார். இங்கு அனுமனுக்கு பின்னால் ராமர் நின்றார்.
தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் துரோகிகள் என பாரதீய ஜனதா தலைவர்கள் கூறினார்கள். எனவே ஒட்டுமொத்த டெல்லியும் அந்த முத்திரையை பெறப்போகிறதா? மோடியும், அமித்‌ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல: என்பதையே டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு காட்டுகிறது. எந்த நாடும் மதம் இல்லாமல் இல்லை. ஆனால் மதம் என்பது தேசபக்தி என்று அர்த்தம் அல்ல.அரசியல் ஆதாயத்துக்காக மத பிரச்சினைகள் தூண்டப்பட்டன. டெல்லி வாக்காளர்கள் அதை வாக்காளர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மோடியும், அமித்‌ஷாவும் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற கட்டுக்கதையை மக்கள் கடந்து செல்ல வேண்டும்.

பிரதமர் மோடிக்கும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான பொதுவான அம்சம் இருவரும் சுயநலவாதிகள் என்பது தான். ஆனால் மோடிக்கு பெரும் ஆணவமும் உள்ளது.கெஜ்ரிவால் ஒருமுறை முழு நாட்டையும் கைப்பற்ற விரும்புவதாக சொன்னார். நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் அவர் தனது வரம்பை உணர்ந்து கொண்டு டெல்லியில் தனது கட்சியை கட்டமைத்துக் கொண்டார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என பாரதீய ஜனதா உறுதி அளித்து இருந்தது. ஆனால் 15 ரூபாய் கூட செலுத்தப்படவில்லை."என்கிறது அந்த கட்டுரை.

click me!