இன்று டெல்லி முதல்வராக 3வது முறையாக பதவியேற்கிறார் அரவிந்த்கெஜ்ரிவால்.!

By Thiraviaraj RMFirst Published Feb 16, 2020, 8:32 AM IST
Highlights

இந்தியாவின் இதயமாக கருதப்படும் டெல்லிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள, 70 தொகுதிகளில், 62 தொகுதிகளில் வென்று, ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியை தக்க வைத்துள்ளது. பா.ஜ., எட்டு தொகுதிகளில் வெற்றி. காங்கிரஸ், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் சில இடங்களில் டெப்பாசிட் காலியானது.இது தான் தற்ப்போதுள்ள டெல்லி அரசியல் களம்.

T.Balamurukan

அரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லி முதல்வராக பதவியேற்க  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், கெஜ்ரி வால் இன்று காலை, 10:00 மணிக்கு, மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார்.அவருடன், மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் உசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோர் அமைச்சர்களாகபதவியேற்கின்றனர்.

பதவியேற்பு விழா, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கிறது. கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு, டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடி, டில்லியைச் சேர்ந்த, பா.ஜ.,வின் ஏழு எம்.பி.,க்களுக்கு மட்டும், கெஜ்ரிவால் அழைப்பு விடுத்து உள்ளார். இந்த விழாவில குட்டி கெஜ்ரிவால் கலந்துகொள்கிறார்.

துணை முதல்வரும், கல்வித்துறை அமைச்சருமான மனிஷ் சிசோடியா .'பஸ்களில் மாணவர்களுக்கு இலவச பயணம், பள்ளி பாடத்திட்டத்தில் தேசபக்தி பாடம் சேர்ப்பு, வீட்டுக்கே ரேஷன் பொருட்கள் சப்ளை, காற்று மாசை குறைக்க நடவடிக்கை ஆகிய திட்டங்கள்முதல் கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றார்.

click me!