ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை கொண்டவர் ஜெட்லி... உருகிய ஓபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Aug 25, 2019, 12:51 PM IST
Highlights

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பு, மரியாதை கொண்டிருந்தவர் மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பு, மரியாதை கொண்டிருந்தவர் மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற போது அருண் ஜெட்லிக்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட நடவடிக்கைகளை பிரதமரின் ஆலோசனையின் பேரில் அமல்படுத்தியவர். கடந்த சில ஆண்டுகளாக ஜெட்லி உடல்நிலை சரியில்லா காரணத்தால், அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். அப்போது, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உடல் நிலையை கருத்தில் கொண்டு தேர்தலிலும் போட்டியிடவில்லை. மேலும், அமைச்சர் பதவியும் வேண்டாம் என்று அரசியலில் ஒதுங்கியே இருந்து வந்தார். திடீரென கடந்த ஆகஸ்ட 9-ம் தேதி அருண் ஜெட்லி சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று உயிரிழந்தார். இவருக்கு அரசியல் கட்சி தலைவர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடலுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், அருண் ஜெட்லி மரணம் நாட்டிற்கும், பாஜகவிற்கும் பேரிழப்பு. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பு, மரியாதை கொண்டிருந்தவர். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றியவர் என்று புகழாராம் சூட்டியுள்ளார். 

தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பெரும் பாலமாக இருந்தவர் அருண் ஜெட்லி. அவரது மறைவுக்கு அவரது குடும்பத்திற்கு, அதிமுக முதல்வர் இபிஎஸ், சார்பில், எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

click me!