"ஆளுநர் உறுதியான நடவடிக்கை எடுப்பார்" - ஜெட்லி நம்பிக்கை

 
Published : Feb 16, 2017, 12:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
"ஆளுநர் உறுதியான நடவடிக்கை எடுப்பார்" - ஜெட்லி நம்பிக்கை

சுருக்கம்

தமிழகத்தில் அரசியலமைப்பு சட்டப்படி அரசமைக்க ஆளுநர் உறுதியான நடவடிக்கை எடுப்பார் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

தமிழக அரசியல் வானிலை சூழல் தெதாடர்ந்து மப்பும் மந்தாரமுமாகவே காணப்படுகிறது. சசிகலா மற்றும் ஓபிஎஸ் இடையே நடைபெற்ற போராட்டம் கடுமையாக இருந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே சசிகலாவுக்குப் பதில் எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு  ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்கிறார்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் ஆட்சி அழைக்காததன் பின்னனியில் பாஜக உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடைய இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக அதிகாரப்போட்டி நிலவுகிறது. இது அக்கட்சியின் தனிப்பட்ட விவகாரம். என தெரிவித்தார்.



தமிழக நிகழ்வுகளுக்கும் பா.ஜ., மற்றும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பது அவர்களது உள்கட்சி விவகாரம் என்று கூறினார்.

அதே நேரத்தில் அரசியலமைப்பு சட்டப்படி அரசமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என அருண் ஜெட்லி உறுதியாக தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு