
ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்று வரும் எதிகாரப் போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இரு தரப்பினருமே தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்,
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் இன்று சந்திக்கிறார். இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை பதவியேற்பு நிகழ்ச்சியும் ஒரு வாரத்திற்குப் பின் வாக்கெடுப்பும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பும் தங்களை அழைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே தமிழக பிரச்சனைகள் பிரச்சனைகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தத் தெரிவித்து வரும் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமையுமானால், அது அதிமுகவுக்கு பெரும் அழிவைத் தரும் என தெரிவித்துள்ளார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி பெங்களூரு ஜெயிலில் இருந்துதான் நடைபெறும் என்றும் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் சட்டப் பேரவைக்கு தற்போது தேர்தல் நடைபெற்றால் அப்போது திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும் கட்ஜு கருத்துத் தெரிவித்துள்ளார்.