கலைஞர் போட்ட பிச்சை அல்ல: அம்பேத்கர் போட்ட பிச்சை.. ஆர்.எஸ்.பாரதிக்கு மக்கள் நீதி மய்யம் பதிலடி.

Published : Feb 20, 2020, 08:25 PM IST
கலைஞர் போட்ட பிச்சை அல்ல: அம்பேத்கர்  போட்ட பிச்சை.. ஆர்.எஸ்.பாரதிக்கு மக்கள் நீதி மய்யம் பதிலடி.

சுருக்கம்

'அண்ணல் அம்பேத்கர்' பெற்றுத்தந்த உரிமையில் தலைநிமிந்தது ஒடுக்கப்பட்ட இனம். அவர் ஒடுக்கப்பட்ட இனத்திற்கு மட்டுமல்ல; வர்ணாசிரம கொடுமையில் சிக்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழிகாட்டியவர் அவர்.கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நினைத்தாலும் அதில் கைவைத்திருக்க முடியாது.

 T.Balamurukan

'அண்ணல் அம்பேத்கர்' பெற்றுத்தந்த உரிமையில் தலைநிமிந்தது ஒடுக்கப்பட்ட இனம்.அவர் ஒடுக்கப்பட்ட இனத்திற்கு மட்டுமல்ல; வர்ணாசிரம கொடுமையில் சிக்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழிகாட்டியவர் அவர்.கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நினைத்தாலும் அதில் கைவைத்திருக்க முடியாது.

தி.மு.க-வின் அமைப்புச் செயலாளராக இருக்கும் ஆர்.எஸ்.பாரதி, சமீபத்தில் கட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் பேசியவர்.'இந்த நாட்டிற்குள் எவன் எவனோ நுழைந்துவிட்டு, நாய்கள், பேய்கள் எல்லாம் பேசத் துவிங்கிவிட்டன. எச்.ராஜா போன்ற ஆட்களெல்லாம் வாய் கிழியப் பேசுகிறார்கள்.வட இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து மாநிலத்தவர்களும் முட்டாள்களாகவே இருக்கிறார்கள். அறிவே கிடையாது. ஹரிஜன் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட ஐகோர்ட் நீதிபதியாக இல்லை. இன்று வரை ஒருவர் கூட உயர் நீதிமன்ற நீதிபதியாக இல்லை. ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் நீதிபதிகளாக இருக்கிறார்கள். அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று சர்ச்சையாகப் பேசினார். 

இந்தப் பிரச்சினை தமிழக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுதியிருக்கும் நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின், ஆதி திராவிடர் நல அணியின் மாநிலச் செயலாளர், ஜெகதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணல் அம்பேத்கர் பெற்றுத்தந்த உரிமையில் நிமிர்ந்தெழுந்தது ஒடுக்கப்பட்ட இனம்.
அவர் ஒடுக்கப்பட்ட இனத்திற்கு மட்டுமல்ல வர்ணாசிரம கொடுமையில் சிக்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழிகாட்டியவர்.கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நினைத்தாலும் அதில் கைவைத்திருக்க முடியாது".என்றிருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!