கலைஞர் பிறந்த நாள்.. பிகே செய்த கூத்து.. கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்.. விரக்தியில் ஸ்டாலின்.! என்னாச்சு.

By T BalamurukanFirst Published Jun 4, 2020, 10:07 AM IST
Highlights

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி டிரெண்டான Father Of Modern Tamilnadu என்ற ஹேஸ்டேக் திமுகவினரால் டிரெண்ட் செய்யப்படவில்லை என்பது அம்பலாகியுள்ளது.இதனால் பிரசாந்த் கிஷோர் மீது திமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.மேற்கு வங்காளத்தில் நடைபெற இருக்கும் தேர்தலுக்காக அங்கே முகாமிட்டு மம்தாபானர்ஜியுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் பிகே கலைஞர் பிறந்த நாள் ஹேஸ்ட்டேக் கில் கோட்டைவிட்டு விட்டார்

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி டிரெண்டான Father Of Modern Tamilnadu என்ற ஹேஸ்டேக் திமுகவினரால் டிரெண்ட் செய்யப்படவில்லை என்பது அம்பலாகியுள்ளது.இதனால் பிரசாந்த் கிஷோர் மீது திமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.மேற்கு வங்காளத்தில் நடைபெற இருக்கும் தேர்தலுக்காக அங்கே முகாமிட்டு மம்தாபானர்ஜியுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் பிகே கலைஞர் பிறந்த நாள் ஹேஸ்ட்டேக் கில் கோட்டைவிட்டு விட்டார் என்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்.

தமிழகத்தின் 5 முறை முதலமைச்சராகவும், திமுகவின் தலைவராகவும் இருந்தவர் கருணாநிதி. இவரது 97-வது பிறந்த நாள் இன்று திமுகவினரால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேவேளையில், டுவிட்டரில், FatherOfModernTamilnadu, #HBDkalaingar97 ஆகிய ஹேஸ்டேக்குகள் டிரெண்டாகி வந்தன.

கருணாநிதி மீதான அன்பினாலும், பாசத்தினாலும் திமுகவினர் டிரெண்ட் செய்து வருவதாக நெட்டிசன்கள் நம்பி வந்தனர். ஆனால், அன்பு, பாசம் என்று எதுவும் இல்லை, எல்லாமே பணம் தான் என்பது அம்பலமாகியுள்ளது.2021-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில், உடன்பிறப்புகளை விட பிரசாந்த் கிஷோரின் டீமையே ஸ்டாலின் அதிகம் நம்பியுள்ளார். திமுக ஐடி விங்கை விட பிரசாந்த கிஷோரின் பேச்சுக்களுக்கு மேலிடத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவது நாளுக்கு நாள் அம்பலமாகி வருகிறது. அப்படிபட்ட பிரசாந்த் கிஷோரின் வேலைதான், இந்த FatherOfModernTamilnadu ஹேஸ்டேக்.


தற்போது, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் பணி செய்வதற்காக பிரசாந்த் கிஷோர் கொல்கத்தாவில் முகாமிட்டுள்ளார். இன்று கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி டுவிட்டரில் FatherOfModernTamilnadu என்ற ஹேஸ்டேக்கில் பதியப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட டுவிட்கள் கொல்கத்தாவில் உள்ள பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் அலுவலகத்தில் இருந்துதான் பதியப்பட்டுள்ளது. இந்த ஹேஸ்டேக் டிரெண்டாவதில் திமுகவினரின் பங்கு மிகவும் குறைவுதான்.திமுக, பிரசாந்த் கிஷோரின் இந்த பித்தலாட்டத்தை அறிந்த நெட்டிசன்கள், திமுகவினரை கழுவி ஊற்றி வருகின்றனர். கருணாநிதி FatherOfModernKolkata என விமர்சனம் செய்து வருகின்றனர்.


 

click me!