தென் தமிழகத்தில் கெத்துக்காட்டி... மற்ற மாநிலங்களில் மண்ணைக்கவ்விய காங்கிரஸ்.. டாப் ஸ்டாரான மோடி.!

By T BalamurukanFirst Published Jun 4, 2020, 9:07 AM IST
Highlights

இந்தியாவில் கொரோனா தடுப்பு பணியில் பிரதமர் மோடியின் செயல்பாடு மற்றும் மாநில முதலமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஐ.ஏ.என்.எஸ்.சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. அதன்படி, தேசிய அளவில் பிரதமர் மோடியின் செயல்பாட்டிற்கு 65.69 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் தென் இந்தியாவில் மோடியின் செல்வாக்கு குறைந்து ராகுல்காந்திக்கு செல்வாக்கு ஓங்கியிருக்கிறது  என்று அந்த சர்வே முடிவு வெளியானதில் கவலையில் இருக்கிறது பாஜக.
 

இந்தியாவில் கொரோனா தடுப்பு பணியில் பிரதமர் மோடியின் செயல்பாடு மற்றும் மாநில முதலமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஐ.ஏ.என்.எஸ்.சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. அதன்படி, தேசிய அளவில் பிரதமர் மோடியின் செயல்பாட்டிற்கு 65.69 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் தென் இந்தியாவில் மோடியின் செல்வாக்கு குறைந்து ராகுல்காந்திக்கு செல்வாக்கு ஓங்கியிருக்கிறது  என்று அந்த சர்வே முடிவு வெளியானதில் கவலையில் இருக்கிறது பாஜக. தென்தமிழகத்தை குறிவைத்திருக்கும் பாஜகவுக்கு இந்த சர்வே ரிசல்ட் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.


அந்த சர்வே முடிவில் 58.36 சதவீத அதிக திருப்தியடைந்ததாகவும், 24.01 சதவீதம் திருப்தியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். 16.71 சவீதத்தினர் மோடியின் செயல்பாட்டிற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பாஜக ஆளாத மாநிலங்களில் ஒன்றான ஒடிசாவில் பிரதமர் மோடியின் செயல்பாட்டிற்கு 95.6 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 84.87 சதவீதம் பேர் "மிகவும் திருப்தி" அடைந்தனர், அவர்களில் 2.2 சதவீதம் பேர் மோடியை ஏற்கவில்லை.ஒடிசாவைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கார் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அங்கு அவரது புகழ் முறையே 93.95 சதவீதம், 92.73 மற்றும் 83.6 என இருக்கிறதாம். ஒடிசாவைப் போலவே, இந்த மூன்று மாநிலங்களில் இரண்டு பா.ஜனதா ஆளாத மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொற்று பாதிப்பு அதிகமுள்ள மராட்டியத்தில் பிரதமர் மோடிக்கு 71 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது.இதேபோல், இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை சந்திக்க இருக்கும் பீகாரில் 58.48 சதவீதத்தினரும், அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் மேற்குவங்காளத்தில் 60 சதவீதத்தினர் மோடியின் செயல்பாட்டிற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்களாம்.

தென் மாநிலங்களான தமிழகத்தில் 32.15 சதவீதத்தினரும், கேரளாவில் 32.89 சதவீதத்தினரும் பிரதமர் மோடிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.தமிழ்நாடு, கேரளா, கோவா மாநிலங்களில் பிரதமர் மோடியை விட ராகுல்காந்திக்கு அதிக செல்வாக்கு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாம்.அதேநேரம் தேசிய அளவில் பிரதமர் மோடியுடன் ஒப்பிடுகையில் ராகுல்காந்திக்கு 23 சதவீதத்தினரே ஆதரவு தெரிவித்துள்ளார்களாம். 

உண்மையில், ராகுல்காந்தியின் செல்வாக்கு இரட்டைவாக்கு  ஆறு மாநிலங்கள் அல்லது பிராந்தியங்கள் மட்டுமே. இரட்டை இலக்கங்களில் இருந்தன மீதமுள்ள அனைத்து மாநிலங்களும் ஒற்றை இலக்கத்தில் அல்லது மோசமாக, எதிர்மறையாக இருந்தன.காங்கிரஸ் ஆளும் அல்லது ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் மாநிலத்த தவிர மற்ற மாநிலங்களில் பதிலளித்தவர்கள் அவரைப் பற்றி மிக உயர்ந்த கருத்தைக் கொண்டிருக்கவில்லை. உதாரணமாக, காங்கிரஸ் ஆட்சியில் உள்ள சத்தீஸ்காரில், ராகுல்காந்திக்கு 5.41 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. 

click me!