தடுப்புக் காவலில் இருந்த அரசியல்கட்சித் தலைவர்கள் திடீரென இடமாற்றம்: ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அதிரடி முடிவு

By Selvanayagam PFirst Published Nov 18, 2019, 9:36 PM IST
Highlights

ஜம்மு அண்டு காஷ்மீரில் நீண்ட நாட்களாக காவலில் உள்ள ஜே.கே.பி.பி. தலைவர் சஜித்யாத் மற்றும் பி.டி.பி.-ன் முன்னாள் அமைச்சர் நயீம் அக்தர் உள்பட 33 அரசியல் தலைவர்களை ஸ்ரீநகரில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு அதிரடியாக ஜே ஆண்டு கே நிர்வாகம் மாற்றியது.
 

ஜம்மு அண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு நீக்கியது. மேலும், ஜம்மு அண்டு காஷ்மீரை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் முறைப்படி உதயமாகின.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு முந்தையநாளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, ஒமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா மற்றும் பிரிவினைவாதிகள் உள்பட ஏராளமான தலைவர்களை காஷ்மீர் நிர்வாகம் காவலில் எடுத்தது. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப தொடங்கியவுடன், காவலில் உள்ள அரசியல் தலைவர்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க மாட்டோம் என உறுதி அளித்தவர்களை மட்டும் ஆய்வு செய்து விடுவிக்கப்பட்டனர். தற்போது மிகச் சிலரை காவலில் உள்ளனர்.

தற்போது காஷ்மீரில் குளிர்காலம் தொடங்க உள்ளதால், அதன் கோர தாக்கத்தால் காவலில் உள்ள தலைவர்கள் பாதிக்கப்பட கூடாது என்ற எண்ணத்தில், செண்டார் லேக் வியூ ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்த, ஜே.கே.பி.பி. தலைவர் சஜித்யாத் மற்றும் பி.டி.பி.-ன் முன்னாள் அமைச்சர் நயீம் அக்தர் உள்பட 33 அரசியல் தலைவர்களை ஸ்ரீநகரில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு நேற்று காஷ்மீர் நிர்வாகம் மாற்றியது. 

அந்த விடுதியில் ஹீட்டிங் வசதிகள் உள்ளதால் காவலில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பனதாக இருக்கும் ஜம்மு அண்டு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்தது. கடந்த வியாழக்கிழமையன்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஜபிர்வான் ரேஞ்ச் சுற்றுலா ஹட்டிலிருந்து அரசுக்கு சொந்தமான மவுலானா ஆசாத் சாலையில் உள்ள வி.ஐ.பி. பங்காளவுக்கு மாற்றப்பட்டார்.

click me!