ஹெச்.ராஜாவை கைது செய்... வெகுண்டெழுந்த நெல்லை கண்ணன் ஆதரவாளர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Jan 1, 2020, 4:19 PM IST
Highlights

மோடியையும், அமைத் ஷாவையும் அவதூறாக பேசிய நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரிய ஹெச். ராஜாவை கைது செய்யக்கோரி சமூக வலைதளங்களில் ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. 
 

மோடியையும், அமைத் ஷாவையும் அவதூறாக பேசிய நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரிய ஹெச். ராஜாவை கைது செய்யக்கோரி சமூக வலைதளங்களில் ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

 

மோடியையும், அமைத் ஷாவையும் சோலியை முடித்து விட வேண்டும் என நெல்லை கண்ணன் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ஆவேசமடைந்த ஹெச்.ராஜா, 'இந்த நாடகம் கண்டு காவல்துறை தயங்கலாமா. கைது செய்து ரிமாண்ட் கைதியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாதா?

நாட்டின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சோலிய முடிக்கச் சொல்லும் போது உடல் ஆரோக்கியமாக இருந்ததாம். இப்ப சுகவீனமாம். பாரத பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கொலை செய்ய தூண்டிய கண்ணன் என்பவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் எனக் கூறி சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 

& pic.twitter.com/NyY8kQmvdG

— வாய்ப்பில்லை ராஜா. (@tamilinniyan)


இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் கல்லெடுத்து வீசினால் உள்ளே குண்டு விழும் எனப்பேசிய ஹெச்.ராஜா வீடியோவை பகிர்ந்து இப்படி பேசுவது மட்டும் வன்முறையில்லையா? எனக்கேட்டு ராஜாவை  உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது கடுமையான முறையில் விசாரிக்க வேண்டும்’’ என பதிவு போட்டு #ArrestHraja என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி சமூகவலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மோடியையும், அமைத் ஷாவையும் அவதூறாக பேசிய நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரிய ஹெச். ராஜாவை கைது செய்யக்கோரி சமூக வலைதளங்களில் ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. மோடியையும், அமைத் ஷாவையும் சோலியை முடித்து விட வேண்டும் என நெல்லை கண்ணன் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ஆவேசமடைந்த ஹெச்.ராஜா, 'இந்த நாடகம் கண்டு காவல்துறை தயங்கலாமா. கைது செய்து ரிமாண்ட் கைதியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாதா? நாட்டின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சோலிய முடிக்கச் சொல்லும் போது உடல் ஆரோக்கியமாக இருந்ததாம். இப்ப சுகவீனமாம். பாரத பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கொலை செய்ய தூண்டிய கண்ணன் என்பவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் எனக் கூறி சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் கல்லெடுத்து வீசினால் உள்ளே குண்டு விழும் எனப்பேசிய ஹெச்.ராஜா வீடியோவை பகிர்ந்து இப்படி பேசுவது மட்டும் வன்முறையில்லையா? எனக்கேட்டு ராஜாவை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது கடுமையான முறையில் விசாரிக்க வேண்டும்’’ என பதிவு போட்டு #ArrestHraja என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி சமூகவலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

 

ஒரு தாய் மார்பில் பால் குடித்தவனாக இருந்தால் நீங்கள் சொன்னதை செய்து காட்டவும். pic.twitter.com/IF35j6veBn

— Narendran (@Narendranramar)

 

click me!