பெண்களை குறிவைத்து தாக்கிய... ஏ.டி.எஸ்.பியை கைது செய்யும்வரை உண்ணாவிரதம்...

 
Published : Apr 11, 2017, 07:44 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
பெண்களை குறிவைத்து தாக்கிய... ஏ.டி.எஸ்.பியை கைது செய்யும்வரை உண்ணாவிரதம்...

சுருக்கம்

arrest adsp public prostest arrest adsp public prostest

மதுக்கடையை அகற்றக்கோரி தடியடி நடத்திய போலீசார் மீது விசாரணை நடத்த கோரி வடக்கு மண்டல ஐஜி பாரி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் சியாமளா புரத்தில், டாஸ்க் மார்க் மதுபான கடையை அகற்ற கோரி, பொதுமக்கள் 5 மணிநேரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சூலூர் எம்.எல்.ஏ கனகராஜை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

இதையடுத்து டாஸ்க் மார்க் கடை அகற்றப்படும் என்று அதிகாரிகள் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று  கூறினர்.

இந்நிலையில், சூலூர் எம்.எல்.ஏ கனகராஜை பொதுமக்களிடம் இருந்து மீட்பதற்கு காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர், அப்போது இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால், அதிரடி படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க தடியடி நடத்தினர்.

அப்போது அங்கிருந்த, பெண் ஒருவரை ஏ. டி.எஸ்.பி பாண்டியராஜன் கன்னத்தில் ஓங்கி அறைந்ததுடன் பெண்களையே குறிவைத்து மூர்க்க தனமாக விரட்டி அடித்தார்.

பல பெண்கள் மற்றும் ஆண்களின் மண்டைகள் உடைக்கப்பட்டது, பலர் காயமடைந்தனர் அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினரிடம்  உள்துறை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  விளக்கம் கேட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாக கூறியுள்ளனர். 

மேலும் வடக்கு மண்டல ஐ.ஜி பாரி  பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்களை தாக்கியது குறித்து விசாரணை நடத்த டி.ஐ.ஜி தீபக் தமூருக்கு உத்தரவிட்டுள்ளார். 

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கபட்டது குறித்து, அணைத்து காட்சிகள் மற்றும் மகளிர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையில் சியாமளா புரம் பொதுமக்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும்  பெண்களை தாக்கிய ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனை கைது செய்யும் வரை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

திரும்பத் திரும்ப அவமானம்..! பாஜக சவகாசமே வேண்டாம்..! ஓ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு..!
உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி