
வருமான வரித்துறை அலுவலகத்தில், நேற்று நேரில் ஆஜரான விஜயபாஸ்கரிடம், அதிகாரிகள் பல கேள்விகளை துருவி, துருவி கேட்டுள்ளனர்.
ஆரம்பத்தில், சுற்றிவளைத்து திசை திருப்புவது போல பேசியுள்ளார் விஜயபாஸ்கர்.
பின்னர், உங்களை ஒரே நாளில் வளைக்க வில்லை, 120 நாட்கள் கண்காணித்து, ஆதாரங்களை எல்லாம் திரட்டிய பிறகே வளைத்துள்ளோம் என்று, அதிகாரிகள் மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர்.
அப்போது, பன்னீர்செல்வத்திற்கு வெளிநாட்டில் சொந்தமாக ஒரு தீவு உள்ளது, அதற்கான விவரங்கள் என்னிடம் உள்ளது என்று விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.
கோபமடைந்த அதிகாரிகள், அது இருக்கட்டும், கேட்கிற கேள்விக்கு மட்டும் உரிய பதிலை சொல்லுங்கள், என்று ஆதாரங்களை எல்லாம் எடுத்துப்போட்டு கிடுக்கி பிடி போட்டுள்ளனர்.
இனியும், தப்பிக்க முடியாது என்று உணர்ந்த அவர், வேறு வழியின்றி பல உண்மைகளை ஒத்துக்க கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.