அமித்ஷாவை வரவேற்க தடபுடல் ஏற்பாடு..!! வழியெங்கிலும் பாஜகவினர் திரண்டு மனிதச்சங்கிலி வரவேற்பு அளிக்க உள்ளனர்.

Published : Nov 21, 2020, 10:14 AM IST
அமித்ஷாவை வரவேற்க தடபுடல் ஏற்பாடு..!! வழியெங்கிலும் பாஜகவினர் திரண்டு மனிதச்சங்கிலி வரவேற்பு அளிக்க உள்ளனர்.

சுருக்கம்

இன்று மதியம்1:30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. விமான நிலையத்திலிருந்து நேராக அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டல் சென்றடைகிறார்.  

இன்று மதியம்1:30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. விமான நிலையத்திலிருந்து நேராக அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டல் சென்றடைகிறார். வழியெங்கிலும் தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலத்த கரகோஷத்துடன் மனிதச்சங்கிலி வரவேற்பு அளிக்க உள்ளனர். சமூக விதிகளை பின்பற்றி மாஸ்க் அணிந்து அரசாங்க நெறிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ஆங்காங்கே பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தமிழக பாஜக நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஜக தொண்டர்களின் அவசர மருத்துவ சேவைக்காக பாஜக மருத்துவ அணி சார்பில் ஆம்புலன்ஸ் மற்றும் அவசரகால மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். பல்வேறு தமிழக கிராமியக் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த கலைஞர்கள் பிரமாண்டமான வரவேற்பு உள்துறை அமைச்சர் அவர்களுக்கு அளிக்க உள்ளனர். மாலை 06.30 மணியளவில் நடக்கவுள்ள பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார்.இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட, பதிவு செய்த பத்திரிக்கையாளர்கள் மட்டும்  அனுமதிக்கப்படுவர். 

உரிய பத்திரிகையாளர் அடையாள அட்டை, மற்றும் தனிநபர் அரசாங்க அடையாள அட்டையுடன் வரும் பத்திரிகையாளர்கள் காவல்துறையின் முறையான சோதனைகள் முடிந்து மாலை 05:15 மணிக்குள் நிகழ்ச்சி அரங்கத்திற்கு வந்து கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. நிகழ்ச்சி முடிந்ததும் அமித்ஷா  Dinner-ல் கலந்து கொள்கிறார் இவ்வாறு தமிழக பாஜகவின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!