அமித்ஷாவை சந்திக்கும் மு.க. அழகிரி ஆதரவாளர் கே.பி.ராமலிங்கம்... பாஜகவில் ஐக்கியம்..?

By Asianet TamilFirst Published Nov 21, 2020, 9:02 AM IST
Highlights

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வர உள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளரும் திமுக முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம், அவரைச் சந்திக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

திமுகவில் விவசாய அணி செயலாளராக இருந்தவர் கே.பி. ராமலிங்கம். அதிமுகவிலில் இருந்தபோது இரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த கே.பி.ராமலிங்கம், திமுகவில் மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். தமிழகத்தில் கொரோனா வைரல் பரவல் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மு.க. ஸ்டாலினின் இந்த பேச்சை கே.பி. ராமலிங்கம் விமர்சனம் செய்தார். இதனால், திமுகவிலிருந்து கட்டம் கட்டப்பட்டு நீக்கப்பட்டார் கே.பி.ராமலிங்கம்

. 
அடிப்படையில் மு.க. அழகிரியின் ஆதரவாளராக இருந்த கே.பி. ராமலிங்கம், மு.க ஸ்டாலினை தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களில் விமர்சித்து வந்தார். இந்நிலையில் உள் துறை அமைச்சரும் பாஜக முன்னாள் தேசிய தலைவருமான அமித்ஷா இன்று மதியம் சென்னை வருகிறார். தமிழக தேர்தல் குறித்து பாஜகவினருடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். அமித்ஷாவின் இந்த வருகையின்போது  நடிகர் ரஜினி உள்பட பலரையும் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது கே.பி.ராமலிங்கம், அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
அமித்ஷா முன்னிலையில் பாஜகவின் இணைவார் என்றும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!