கொரோனா பீதி... வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்ய ஏற்பாடு.. சத்யபிரதா சாகு தகவல்..!

By vinoth kumarFirst Published Apr 5, 2021, 1:54 PM IST
Highlights

பூத் ஸ்லிப் இல்லை என்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

பூத் ஸ்லிப் இல்லை என்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் காலை 7 முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 10,813 வாக்குச்சவாடிகள் பதற்றமானவை. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மோத்தம் 6.28 கோடி வாக்களர்கள் நாளை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 4,17,521 பணியாளர்கள் நாளை சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடுவர். 

வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை வழங்கப்படும். தமிழகத்தில் 50 சதவீதம் வாக்குச்சாவடிகள்  வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். கொரோனா பாதித்தவர்கள் பாதுகாப்பு கவச உடையுடன் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வாக்குச்சாவடிகளில் எத்தனை பேர் வரிசையில் இருக்கின்றனர் என்பதை தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  பூத் ஸ்லிப் இல்லை என்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம். தமிழகத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.428 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடர்பான தகவல்களை பெற 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் அதிக தேர்தல் விதி மீறல் புகார்கள் வந்துள்ளன. பார்வை மாற்றுத்தினாளிகளுக்கு என பிரத்யேகமான பூத் சிலிப்கள் வழங்கப்படுள்ளன. இன்று மாலைக்குள் அனைத்து வாக்களர்களுக்கும் பூத் சிலிப்கள் வழங்கப்படும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

click me!