தமிழக மக்களே உஷார்... இயல்புக்கு மாறான வெப்பநிலை.. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

By Ezhilarasan BabuFirst Published Apr 5, 2021, 1:33 PM IST
Highlights

திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில்  அனல்காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முற்பகல்  1200  முதல் பிற்பகல்   0400 வரை திறந்தவெளியில் வேலை செய்வதை  தவிர்க்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

கடலோர மாவட்டங்களில் காற்றில் உப்பு ஈரப்பதம் (Relative Humidity) 60 முதல் 80 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும்,  இயல்புக்கு மாறாகவும், அதிகமாகவும் வியர்க்கும் என்பதால், தேவைக்கேற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு: 05.04.2021 முதல் 07.04.2021 வரை, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில்  அனல்காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முற்பகல்  1200  முதல் பிற்பகல்   0400 வரை திறந்தவெளியில் வேலை செய்வதை  தவிர்க்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். ஏனைய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் உயரக்கூடும். வளிமண்டலத்தில் 1 கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் சுழற்சியின் காரணமாக 05.04.2021: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 06.04.201 முதல் 08.04.2021: வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 09.04.2021: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி  நேரத்திற்கு வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28  டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் எடப்பாடி (சேலம்) 3 சென்டிமீட்டர் மழையும் , எருமைப்பட்டி  (நாமக்கல்), மருங்காபுரி  (திருச்சிராப்பள்ளி), ராசிபுரம் (நாமக்கல்), சாம்ராஜ் எஸ்டேட்  (நீலகிரி), கிணற்கோரை  (நீலகிரி), மடத்துக்குளம் (திருப்பூர்) தலா 2 சென்டி மீட்டர் மழையும். தம்மம்பட்டி  (சேலம்), கெட்டி  (நீலகிரி), எமெராலட்  (நீலகிரி), உதகமண்டலம்  (நீலகிரி),  கொடநாடு  (நீலகிரி),  லால்குடி  (திருச்சிராப்பள்ளி), நத்தம்  (திண்டுக்கல்) தலா 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 

 

click me!