ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சி... விஜயகாந்த் பரபரப்பு அறிக்கை..!

Published : Dec 08, 2021, 05:43 PM IST
ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சி... விஜயகாந்த் பரபரப்பு அறிக்கை..!

சுருக்கம்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இதுவரை 11 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த பிபின் ராவத் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் இதுபோன்ற விபத்து இதுவரை நிகழ்ந்தது இல்லை, ராணுவ அதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. எனவே விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டு, உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

கேரளாவில் தலைநகரத்தை அடித்துத் தூக்கிய பாஜக..! 45 ஆண்டுகால சாம்ராஜ்ஜியத்தில் மண்ணை கவ்விய காங்கிரஸ்..!
நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து கேவலமாக பேசும் ஆர்.எஸ் பாரதி..! எச்.ராஜா சாப்பிட்ட எச்சை இலையில் உருள்வாராஇபிஎஸ் ..? என மோசமான கேள்வி