ஹெலிகாப்டர் விபத்தில் நடந்தது என்ன..? நேரடி காட்சியை பரபரப்பாக விளக்கும் சாட்சி..!

By Thiraviaraj RMFirst Published Dec 8, 2021, 3:42 PM IST
Highlights

அந்த ஹெலிகாப்டர் பறந்து வந்தபோது தீயுடன் மரத்தில் மோதியது. ஒரே சவுண்டு. கரும் கும்முன்னு புகையுடன் வந்தது. 

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்தது எப்படி? என்பதை விளக்குகிறார் அங்கிருந்த நேரடி சாட்சி. ‘’அந்த ஹெலிகாப்டர் பறந்து வந்தபோது தீயுடன் மரத்தில் மோதியது. ஒரே சவுண்டு. கரும் கும்முன்னு புகையுடன் வந்தது. அப்படியே வந்து கீழே இருக்கிற மரத்தில் வந்து மோதி பெரிய மரத்தில் மோதியது. அப்போது அந்த ஹெலிகாப்டர் தீப்பற்றி பயங்கரமாக எரிந்தது. அப்போது அந்த ஹெலிகாப்டரில் இருந்து ஒருவர் எரிந்த நிலையில் ஓடி வந்தார். அடுத்து அடுத்து சிலர் தீ பிடித்த நிலையில் சில அதிகாரிகள் ஓடி வந்த்ந்து பொத்தென விழுந்து விழுந்து துடித்தனர். அப்போது ஒரு பையன் ஓடி வந்தான். அவன் தீயணைப்பு படைக்கும், போலீஸுக்கும் போன் செய்தான். அடுத்து அவர்கள் வந்து தீயை அணைத்தனர்’’ என அவர் தெரிவித்தார். 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இன்று காலை 12.20 மணியளவில் வானிலை பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் திடீரென கிழே விழுந்து நொறுங்கியது. 4 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர்களில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை யார் யார் இறந்துள்ளனர் எனஅடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. குன்னூர் மலைப்பகுதியில் காட்டேரி என்ற இடத்தில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பிரதமர் மோடி பாதுகாப்பு அமைச்சருடன் ஆலோசனை நடத்திவருகிறார். விபத்து குறித்து ராஜ்நாத் சிங் பிரதமரிடம் விளக்கமளித்து வருகிறார்.

விரைவில் ராஜ்நாத் சிங் குன்னூர் விபத்துப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

click me!