Army Helicopter crash: 60 ஹெலிகாப்டர் 360 கோடி.. பாதுகாப்பு படை தளபதி உயிரே ஊசலாடுது.. ஆராயும் ராணுவம்..

By Ezhilarasan BabuFirst Published Dec 8, 2021, 5:17 PM IST
Highlights

இந்திய விமானப்படையில் இந்த வகையில் MI-26, MI-24, MI-17, MI-17 V5 உட்பட பல ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. போர்ச்சூழலில் படைகளை வெளியேற்றுவது, மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காக இந்திய விமானப்படையில் இது இடம்பெற்றுள்ளது. 

இந்திய விமானப்படையின் MI-17 ஹெலிகாப்டர் இன்று பகல் கோவை குன்னூரில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட மொத்தம் 14 பேர் அதில் பயணித்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தைச் சந்தித்துள்ளது. காயமடைந்தவர்கள் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிடிஎஸ் பிபின் ராவத் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் அவரது மனைவி உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்த சம்பவத்தை அடுத்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து தமிழகம் விரைந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி  அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஹெலிகாப்டரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் விபத்தை சந்தித்ததாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒன்றரை மணி நேரம் ஹெலிகாப்டர் தீப்பற்றி  தெரியும் அளவிற்கு சோகம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் அதி நவீனமானது என்றும், அது எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் கொண்டது என்றும், பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்  M17 விமானம் எப்படிப்பட்டது என்ற விவரங்களை பார்ப்போம்.. 

குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் IAF MI-17 V5 வகையைச் சேர்ந்தது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இது மீடியம் லிப்டிங் ஹெலிகாப்டர் ஆகும். இந்திய விமானப் படையில்  இதன் பங்கு அளப்பறியது. ராணுவ வீரர்களையும், அதிகாரிகளையும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹெலிகாப்டர் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதாகும், இது இந்திய விமானத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது.  MI-17 V5  ஆனது ரஷ்யா ஷாப்பாரின் துணை நிறுவனமான kazan chopper-ஆல் தயாரிக்கப்பட்டதாகும். இதுவரை  இந்திய விமானப்படைக்கு கிடைக்கப்பெறாத MI-சீரிஸ் ஹெலிகாப்டர்களில் மிகவும் மேம்பட்ட  பிரிவைச்சேர்ந்த எலிகாப்டர் இதுவாகும்.

இந்திய விமானப்படையில் இந்த வகையில் MI-26, MI-24, MI-17, MI-17 V5 உட்பட பல ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. போர்ச்சூழலில் படைகளை வெளியேற்றுவது, மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காக இந்திய விமானப்படையில் இது இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் தேவைப்படும் பட்சத்தில் இலகுரக ஆயுதங்களை கொண்டு தாக்குதல் தொடுக்கும் வகையிலும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக இந்திய விமானப்படை இந்த ஹெலிகாப்படரை இராணுவம் அல்லாத நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறது. 

V5  இன் சிறப்பு அம்சங்கள் என்ன...

இந்த தொடரின்  கூப்பர்கள் உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் அவற்றின் செயல் திறன் மிகவும் நம்பகமானது. ஹெலிகாப்டர் MI-8 ஏர்ஃப்ரேமின்  அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிநவீன தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் மிகவும் குளிரான மற்றும் வெப்பமான சூழலிலும் எளிதாக பறக்க கூடியது. அதேபோல இந்த ஹெலிகாப்டரின் கேபின் மிகவும் பெரியது, 12 சதுர மீட்டருக்கும் அதிகமான பரந்த தளத்தை கொண்டது. இந்த எலிகாப்டர் அதிகளவில் லக்கேஜ் சுமந்து செல்லக் கூடியதும், ராணுவவீரர்கள் அதன் பின் பக்கத்தில் இருந்து விரைவாக தரையிறங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் 4  multi-function டிஸ்ப்ளேக்களை கொண்டுள்ளது. விமானிக்கு பெரிதும் உதவும் ஆன் போர்டு வானிலை ரேடார் மற்றும் ஆட்டோ பைலட் அமைப்புகள் இதில் உள்ளது. இந்தியாவின் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில்  இந்த MI-17 V5 மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த  ஹெலிகாப்டர்களில் விலை...

டிசம்பர் 2006இல் பாதுகாப்புத்துறை 60 எலிகாப்டர்களுக்காக ரஷ்யாவுடன் 130 மில்லியன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2006இல் டாலர் மற்றும் ரூபாயின் சராசரி மாற்று விகிதத்தின் அடிப்படையில் இந்த தொகை சுமார் 6000 கோடி அதாவது ஒரு ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் விலை சுமார் 6 கோடி, இந்த ஒப்பந்தம் ஹெலிகாப்டர் உடன் இன்னும் பல சேவைகள் மற்றும் தொழில் நுட்பங்களை உள்ளடக்கியதாகும். இந்திய விமானப்படை 2013ஆம் ஆண்டில் 36 விமானங்களை பெற்றது. ஏப்ரல் 2019 இல் இந்திய விமானப்படை இந்த ஹெலிகாப்டர்களை பழுதுபார்த்து மாற்றியமைக்க தொடங்கியது. இந்த ஹெலிகாப்டர் இத்தனை சிறப்பம்சங்களை பெற்றிருந்தும் அதில் விவிஐபி மற்றும் சிடிஎஸ் பிபின் ராவத் போன்ற ராணுவ தளபதி இருந்தபோதிலும், இந்த அதிநவீன ஹெலிகாப்டர் எப்படி விபத்தில் சிக்கியது என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இதுகுறித்துதான் ராணுவம் விசாரித்து வருகிறது.

 

click me!