2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் எதிர்பார்த்ததை போலவே பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
ஆளுநரின் உரையை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே ஆளுநர் வெளியேறியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவிக்க, அதிமுக மற்றும் பிற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தது என்றே சொல்லலாம். சுதந்திரப் போராட்ட வீரரான கொடிகாத்த திருப்பூர் குமரனின் 91 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?
இந்நிலையில் திருப்பூர் குமரன் நினைவகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இந்த நிகழ்வில் பங்கேற்க வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், ‘திருப்பூரில் கொடிகாத்த குமரன் பெயரை சூட்டாமல் புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் அவமரியாதை செய்யப்பட்டிருப்பதன் மூலம் தமிழக சட்டமன்றத்தின் மாண்பு கெடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டமே அவமதிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. திமுக தனது கொள்கைகளை ஆளுநர் உரையில் வாசிப்பதற்காக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் பதவியின் மாண்பை பாதுகாக்கும் வகையில் ஆளுநர் சில வரிகளை தவிர்த்து இருக்கிறார்.
ஆளுநரை அவையில் வைத்துக்கொண்டு அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி செய்யப்பட்டு இருப்பதன் காரணமாக அவர் வெளியேறினார். உடனடியாக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 365 படி தமிழக சட்டமன்றத்தை முடக்கி வைக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு சீர்கேடு , ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், பிரிவினைவாத ஆதரவு உள்ளிட்ட காரணங்களுக்காக தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.
இதையும் படிங்க..வெளியானது புதிய ராயல் என்ஃபீல்டு - சூப்பர் மீடியர் 650யின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ!