அறிவாலய ஒட்டுத்திண்ணை குடியிருப்பாளார் கீ.வீரமணி.. கருவாட்டு சாம்பார்? திராவிட இயக்கங்களை கலாய்த்த பெ.மணியரசன்

Published : Sep 16, 2021, 01:10 PM IST
அறிவாலய ஒட்டுத்திண்ணை குடியிருப்பாளார் கீ.வீரமணி.. கருவாட்டு சாம்பார்? திராவிட இயக்கங்களை கலாய்த்த பெ.மணியரசன்

சுருக்கம்

ஏமாளிக்கூட்டமாக நம்மை நினைக்கிறார்கள்.  நம்ம ஆதரவு, நம்ம பணம், நம்ம வாக்கு என எல்லாம் வேண்டும். ஆனால் சேவை வேறு இடத்திற்கு போய்விடும்.  தமிழை வளர்த்தோம் என திமுக, திக கூறுவதெல்லாம் பொய்’’ எனத் தெரிவித்தார். 

தமிழர் தலைவராம் வீரமணி. வெட்கம் இல்ல. நீ திராவிடத்தை வைத்துக் கொள். ஆனால் தமிழர் தலைவர் என்கிற பட்டத்தை துறந்து விடவேண்டும் என பெ.மணியரசன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவரும், தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமானவர் பெ.மணியரசன். இவர் சமீபத்தில் சென்னை பேரூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘’வீரமணி என்கிறவர் கிளம்பி இருக்கிறார். அறிவாலய ஒட்டுத்திண்ணை குடியிருப்பாளர். அவரது இயக்கத்திற்கு என்ன பேர் தெரியுமா? திராவிட இயக்க தமிழர் பேரவை. அது என்ன கருவாட்டுச் சாம்பார். சரி அப்படி தான் இருக்கிறது திராவிடம். அதை வைத்துக் கொள்ள வேண்டியதுதானே. அப்புறம் எதற்கு தமிழர் என்கிற பெயரையும் இணைத்துக் கொள்ள வேண்டும்?  பத்தரை மாதத்து தங்கம் திராவிடர் கழக தலைவர் வீரமணி. அவருக்கு என்ன பட்டம்? தமிழர் தலைவர் வீரமணி.  தமிழர் தான் கலப்படம், போலியாச்சே.

 

அந்தப் பட்டத்தை நாங்கள் வைத்துக் கொள்கிறோம். நீங்கள் ஏன் வைத்திருக்க வேண்டும்? கலப்படம் போலி, அந்தப் பட்டம் சரியில்லை. திராவிடம் தான் ஒரிஜினல். ஜெயலலிதாவுக்கு சமூகநீதிகாத்த வீராங்களை என்கிறப் பட்டம் கொடுக்கிற அளவுக்கு திராவிடம் ஒரிஜினில. தமிழர் தலைவராம் வீரமணி. வெட்கம் இல்ல. நீ திராவிடத்தை வைத்துக் கொள். ஆனால் தமிழர் தலைவர் என்கிற பட்டத்தை துறந்து விடவேண்டும். 

ஏமாளிக்கூட்டமாக நம்மை நினைக்கிறார்கள்.  நம்ம ஆதரவு, நம்ம பணம், நம்ம வாக்கு என எல்லாம் வேண்டும். ஆனால் சேவை வேறு இடத்திற்கு போய்விடும்.  தமிழை வளர்த்தோம் என திமுக, திக கூறுவதெல்லாம் பொய்’’ எனத் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!