அரசியலுக்கு வர தங்களுக்கு தகுதி உள்ளதா? என்று நடிகர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் - செ.நல்லசாமி...

Asianet News Tamil  
Published : Feb 15, 2018, 09:04 AM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
அரசியலுக்கு வர தங்களுக்கு தகுதி உள்ளதா? என்று நடிகர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் - செ.நல்லசாமி...

சுருக்கம்

Are you eligible for politics? Actors want to be self test - Che.nallasamy ...

புதுக்கோட்டை

"அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்கள் தங்களுக்கு அதற்கு தகுதி உள்ளதா? என்று சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்" என்று தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் செயலரும், கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான செ. நல்லசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் செயலரும், கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான செ. நல்லசாமி நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், "தமிழகத்தில்  நெல் கொள்முதல் நிலையங்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அங்கு விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.25  இலஞ்சம் பெறப்படுகிறது.  

இலவசம், மானியம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் அரசு இலஞ்சம் வாங்குவதை ஏன்  கண்டுகொள்ளவில்லை? தமிழக அரசு ஊழல் இல்லாத நிர்வாகம் செய்ய வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும்,  திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலைப் பாதிக்கப்பட்ட பிறகும் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி நடிகர்கள் அரசியலுக்கு வரத் துடிக்கினறனர். அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தகுதியுள்ளவர்கள் மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும்.

உலகத்தில் எந்த நாட்டிலும் கள்ளுக்குத் தடையில்லாதபோது தமிழகத்தில் மட்டும் ஏன் கள்ளுக்குத் தடை விதித்துள்ளனர்? இது உலகளாவிய நடைமுறைக்கு எதிரானது.

நீரா இறக்குவதற்கு அரசு அனுமதி தேவையில்லை. நீரா பானத்தை இறக்குவதற்கு அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. நிபந்தனையின்றி நீரா இறக்க அரசு அனுமதிக்க வேண்டும்.

டாஸ்மாக் விற்பனை குறையக் கூடாது என்பதற்காகவே நீரா இறக்க பல நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. நீராவிற்கு உள்ள நிபந்தனைகளை தளர்த்திவிட்டு, நீராவில் கலப்படம் செய்வோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!