நாம் வாழ்வது தமிழகமா அல்லது போதைப் பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா? எடப்பாடி பழனிசாமி விளாசல்!

By vinoth kumar  |  First Published Mar 2, 2024, 7:53 AM IST

இனி தமிழகத்தில் போதை பொருள் அறவே ஒழிக்கும் வரை நாங்கள் விடுவதாக இல்லை. காவல் துறையும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் களமிறங்கி, மாவட்டந்தோறும் சோதனைகள் நடத்தி, தமிழகத்தில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப் பொருளையும் பறிமுதல் செய்ய வேண்டும்.


காவல்துறையும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் களமிறங்கி, மாவட்டந்தோறும் சோதனைகள் நடத்தி, தமிழகத்தில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப் பொருளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில்: தமிழகத்தில் இரு இடங்களில் இன்று ஒரே நாளில் 180 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை சென்னை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பல கோடிகள் மதிப்புமிக்க போதை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியை அளிக்கிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: இந்தியாவின் போதைப்பொருள் தலைநகராக மாறிய தமிழ்நாடு.. கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆளுங்கட்சியை அலறவிடும் அண்ணாமலை

ரயில் கூப்பைகள் முதல் கார்ப்பரேஷன் குப்பைகள் வரை எங்கு காணினும் போதைப்பொருட்களே நீக்கமற நிறைந்துள்ளன. நாம் வாழ்வது தமிழகமா அல்லது போதைப் பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழித்தெழுந்து, தொடர் நடவடிக்கைகள் எடுத்து போதை பொருள் புழக்கத்தை ஒழிக்க முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.

இனி தமிழகத்தில் போதை பொருள் அறவே ஒழிக்கும் வரை நாங்கள் விடுவதாக இல்லை. காவல் துறையும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் களமிறங்கி, மாவட்டந்தோறும் சோதனைகள் நடத்தி, தமிழகத்தில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப் பொருளையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க:  கஞ்சா, கொக்கைன்,ஹெராயின் என வளர்ந்து இன்றைக்கு மெத் வரை நீளும் போதை பொருள் புழக்கம்-ஸ்டாலினை விளாசும் எடப்பாடி

இந்த போதைப் பொருட்களை புழக்குவோர் யாராக இருப்பினும், எவ்வித பாகுபாடும் இன்றி கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, தமிழகத்தை போதைப் பொருள் அறவும் அற்ற மாநிலமாக மாற்றவேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று இபிஎஸ் பதிவிட்டுள்ளார். 

click me!