மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா..? அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆவேசம்..!

Published : Sep 20, 2021, 12:26 PM IST
மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா..? அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆவேசம்..!

சுருக்கம்

பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா?

பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா?  என பொங்கியுள்ளார் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். '’ எனது கொளுந்தியா மகள் பூப்புனித நீராட்டு விழாவில் நான் பங்கேற்க இருப்பதால் டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி.எஸ்.டி.கூட்டத்திற்கு செல்லவில்லை என மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாக கூறிய போஸ்டை, பிரபல செய்தி வாசிப்பாளர் சவுதாமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

இதற்கு பதிலளித்துள்ள நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ‘’வடிகட்டிய முட்டாள்தனம். கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில். எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும். பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா?’’ என விளக்கமளித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!