சரண்ஜித் சிங்கை முதல்வராக நியமித்து தலித் மக்களை அவமதிக்கிறது காங்கிரஸ்.. பாஜக ஜடி விங் அமித் மாளவியா ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 20, 2021, 12:00 PM IST
Highlights

கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு தற்போதய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி ஆபாச மெசேஜ் அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது, ஆனால் அந்த காவல் அதிகாரி அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை, 

சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் ஆக்குவது ஒட்டுமொத்த தலித் சமூகத்திற்கும் பெரிய அவமானம் என்றும், காந்தி குடும்ப விசுவாசியான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு மட்டும்  பதவியா என்றும், பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கேள்வி  எழுப்பியுள்ளார். அடுத்தாண்டு பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பதவி வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வந்த நிலையில் முதல்வர் பொறுப்பிலிருந்து அமரீந்தர் சிங் விலகினார். 

இந்நிலையில் அடுத்து யார் முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அம்பிகா சோனி, சுக்ஜிந்தர் சிங் ரந்தவாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதை புறக்கணித்து விட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில்  தலித் மக்களின் செல்வாக்கு பெற்ற காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான சரண்ஜித் சிங் சன்னி, மாநில முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக இது முடிவு செய்யப்பட்டதாகவும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். சரண் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, பாஜகவின் தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு தற்போதய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி ஆபாச மெசேஜ் அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது, ஆனால் அந்த காவல் அதிகாரி அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை, அப்போது முதலமைச்சராக இருந்த அமரீந்தர் சிங் தலையிட்டு அந்த பிரச்சினையை தீர்த்து வைத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அதை மேற்கோள் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித் மாளவியா, மீடு குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை தலித் மக்களின் வாக்கை குறி வைத்து முதலமைச்சராக்கி இருப்பது ஒட்டுமொத்த தலித் சமூகத்திற்கு பெரிய அவமானம், அதேபோல் தனது குடும்பத்திற்கு விசுவாசியான நவ்ஜோத் சிங் சித்து மட்டும் காங்கிரசில் பதவி வழங்கப்பட்டுள்ளது. சரண்ஜித் சிங் சன்னி நியமனத்தால் தலித் மக்களுக்கான முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் பெரும் தடையை ஏற்படுத்தி இருக்கிறது. 

சரண்ஜித் சிங் சன்னி தலித் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 33 சதவீதம் வரை தலித்துகள் உள்ளனர், எனவே சரண்ஜித் சிங் சன்னி தற்போது முதல்வராக்க பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பஞ்சாபில் முதலமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!