பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படுகிறதா..? மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

By Thiraviaraj RMFirst Published Aug 30, 2021, 11:07 AM IST
Highlights

செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை - மாணவர்கள் நலன் கருதி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டன. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் நடைமுறையில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது.
 
இதன் காரணமாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இந்த சூழலில் மருத்துவத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம்முதலமைச்சர் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்டை மாநிலமான கேரளாவில் தளர்வுகள் காரணமாக கொரொனா தொற்று வேகமாக அதிகரித்துள்ள சூழலில் தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தற்போதைய கொரோனா பரவல் நிலவரம், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் விதம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. 

இது தவிர, கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களை எவ்வாறு கண்டறிவது, அவர்களை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 
 

click me!