ஆ.ராசா, கனிமொழி விடுவிப்பு! நியாயம் வென்றுள்ளது - துரைமுருகன்! 

Asianet News Tamil  
Published : Dec 21, 2017, 11:22 AM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
ஆ.ராசா, கனிமொழி விடுவிப்பு! நியாயம் வென்றுள்ளது - துரைமுருகன்! 

சுருக்கம்

A.Raja Kanimozhi Release! Justice has won - Durimurukan!

2-ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டது குறித்து எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், நியாயம் வென்றுள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு அமைச்சராக திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து ஆயிரம் கோடி கோடி இழப்பு ஏற்பட்டதாக, தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் நீதிபதி விடுவித்தார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தன. இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. 

பின்னர் இவ்வழக்கு தொடர்பாக, ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.

6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் 21-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 5-ஆம் தேதி அறிவித்தார். இந்த நிலையில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து திமுகவைச் சேர்ந்த துரைமுருகன், செய்தியாளர்களிடம் பேசும்போது அரசியல் உள்நோக்கத்தோடு திமுக மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று புணையப்பட்ட வழக்கு என்றார். நீண்டகால வழக்கு, வாதாடி இதில் வெற்றி கிடைத்துள்ளது. நியாயம் வென்றுள்ளது என்று துரைமுருகன் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

கே.என். நேரு வழக்கில் ஊமையாக இருப்பது ஏன்..? - லஞ்ச ஒழிப்புத் துறையின் முகமூடியைக் கிழித்த நீதிமன்றம்..!
உதயசூரியனில் நிற்க மாட்டோம்.. தனிச் சின்னமே எங்களின் அடையாளம்..! திமுக கூட்டணியில் விசிக அதிரடி..!