2 ஜி நாயகன் ஆ.ராசா, கனிமொழி சென்னை வந்தனர் ! விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்ற ஸ்டாலின்….

 
Published : Dec 23, 2017, 01:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
2 ஜி நாயகன் ஆ.ராசா, கனிமொழி சென்னை வந்தனர் ! விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்ற ஸ்டாலின்….

சுருக்கம்

a.raja and kanimozhi came to chennai

2ஜி ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி டெல்லியில் இருந்து இன்று சென்னை வந்தனர்.

அவர்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமானநிலையத்துக்கு நேரில் வந்து வரவேற்றனர்.

 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் ஆர். ராசா , கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள்மீது போடப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக நீதிபதி கூறியுள்ளார்.

வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்றிருந்த கனிமொழி, ஆர்.ராசா ஆகியோர் 2ஜி வழக்கில் விடுதலையான பின்னர் சென்னை திரும்பினர். விமானநிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.  ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தாரை,தப்படை முழங்க அவர்களை வரவேற்றனர்

இதே போன்ற சென்னை திரும்பிய கனிமொழியை வரவேற்க விமான நிலையத்திற்கு நேரில் வருகை தந்தார் மு.க.ஸ்டாலின். ஆர்.ராசா மற்றும் கனிமொழி வருகையையொட்டி, சென்னை விமான நிலையத்தில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

விமான நிலையம் அருகே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே கனிமொழியைப் புகழ்ந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என விமானநிலைய பகுதியே களைகட்டியுள்ளது.

2ஜி வழக்கில் விடுதலையான ஆர்.ராசா, கனிமொழி சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர் அவர்களை மு.கஸ்டாலின் மற்றும் தி.மு.க தலைவர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆகியோர்  வரவேற்றனர். தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான  தொண்டர்கள் ஆ.ராசாவுக்கும், கனிமொழிக்கும் சால்வைகள் வழங்கி வரவேற்றனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்தனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!