அடுத்த வருஷம் கண்டிப்பா அரசியலுக்கு வருவேன் ….அதிரடியாக களமிறங்கும் கிருஷ்ணப்பிரியா !!

First Published Dec 23, 2017, 1:08 PM IST
Highlights
krishnapriya want to enter politics


அரசியலுக்கு  வருவேன்… ஆனால் எப்படி வருவேன் ? எந்த வழியில் வருவேன் ? என்பதை அடுத்த வருஷம் வரை பொறுத்திருந்து பாருங்கள் என்று இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ஆர்,கேந்கர் தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.அதற்கு ஒருநாள் முன்பு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிசை பெற்ற வீடியோ காட்சிகளை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த செயல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுயது என வெற்றிவேல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டது சசிகலா குடும்பத்திற்குள் பெரும் கொந்களிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை பெறும் காட்சிகளை சசிகலா எடுத்தாகவும், தங்கள் சுயலாபத்துக்காக டி.டி.வி.தினகரன் தரப்பின்ர் வெளியிட்டுவிட்டனர் என இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா குற்றம்சாட்டியிருந்தார்.

இது குறித்து வார இதழ் ஒன்றுக்கு கிருஷ்ணப்பிரியா பேட்டி அளித்துள்ளார். அதில் அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை சசிகலா தான் எடுத்தார். தேவைப்பட்டால் தமிழக அரசு விசாரணை கமிஷனில் அந்த 

வீடியோவை காட்டுங்கள் என்று சொல்லி அவர் அதை எங்களிடம்  கொடுத்தார். பரோலில் வந்தபோதுதான் அதை தந்தார் என தெரிவித்துள்ளார்..

அந்த வீடியோவை காப்பி எடுத்து ஒன்றை தினகரனிடமும், மற்றொன்றை விவேக்கிடமும் கொடுத்திருந்தோம். அதைத்தான் தினகரன், வெற்றிவேலிடம் கொடுத்து வெளியிட வைத்துள்ளார். ஒரிஜினல் வீடியோ இன்னும் நீளமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசிக் கொள்ளும் காட்சிகள் அதில் உள்ளது. அதை துண்டித்து விட்டு சில வினாடி காட்சிகளை மட்டும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வெளியிடப்பட்டது சசிகலாவுக்கே தெரியாது என கிருஷ்ணப்பிரியா அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்..

தன் மீது கொலைப்பழி வந்தபோது கூட வெளியிட விரும்பாத ஒரு வீடியோவை தினகரனுக்காக வெளியிடசசிகலா ஒப்புக் கொண்டிருக்க மாட்டார். அவர் நினைத்திருந்தால் அப்போதே அதை வெளியிட்டிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. இப்போது ஒரே ஒரு தொகுதியில் ஜெயிப்பதற்காக, அதுவும் கட்சியும் சின்னமும் எங்கள் வசம் இல்லாத நிலையில் இந்த வீடியோவை வெளியிட எப்படி அவர் சம்மதம் தெரிவித்திருப்பார்? என கிருஷ்ணப்பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

எங்களிடம் வீடியோ ஆயிரம் இருக்கிறது என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் சொன்ன போதே சசிகலா கண்டித்தார்.  அந்த வீடியோவை பொது மக்களிடம் காட்டுவதற்காக எடுக்கவில்லை என்று தெளிவாக சொன்னார். அதை மீறி வெளியிடுவதும், கருத்து சொல்வதும் தார்மீக ரீதியாக தவறுதான என தெரிவித்துள்ளார்..

தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,  தான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார். ஆனால் எப்படி வருவேன் ? எந்த வழியில் வருவேன் ? என்பதை அடுத்த வருஷம் வரை பொறுத்திருந்து பாருங்கள் என்று கிருஷ்ணப்பிரியா குறிப்பிட்டுள்ளார்.

click me!