அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராவதற்காக 17 வழக்கறிஞர்கள் நியமனம். ஆட்டம் ஆரம்பம்.

By Ezhilarasan BabuFirst Published May 14, 2021, 12:22 PM IST
Highlights

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராவதற்காக 17 வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராவதற்காக 17 வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தபின், மே 7ஆம் தேதி ஆட்சியமைத்த திமுக, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரத்தை நியமித்தது. அதன்பின்னர் அரசு தொடர்புடைய முக்கிய வழக்குகளில் அவர் ஆஜராகிவந்த நிலையில், மற்ற வழக்குகளில் கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களே ஆஜராகிவந்தனர். 

இந்நிலையில் புதிய அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் நடைமுறைகளை முடிக்கும் வரை தற்காலிக அடிப்படையில் 17 வழக்கறிஞர்களை நியமிக்க தமிழக அரசிற்கு தலைமை வழக்கறிஞர் மே 10ஆம் தேதி கடிதம் எழுதினார். அதன் அடிப்படியில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக 17 வழக்கறிஞர்களை நியமித்து தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராக பி.முத்துக்குமார், ஆர்.நீலகண்டன், சி. ஹர்ஷா ராஜ், எஸ். ஜான், ஜெ. ராஜா சிங், ஏ. ஷப்னம் பானு ஆகியோரும்,

கிர்மினல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராக ஏ. தாமோதரன், ஆர். முனியப்பராஜ், ஜெ. சி. துரைராஜ், இ. ராஜ் திலக், எல். பாஸ்கரன், ஏ. கோபிநாத் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மதுரை கிளையில் சிவில் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் வீர கதிரவன், பி. திலக் குமார், ஏ. கே. மாணிக்கம் ஆகியோரும், கிரிமினல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராக  எஸ். ரவி, எம். முத்துமாணிக்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு வழக்கறிஞர் நியமன நடைமுறைகள் முடிந்து, புதியவர்கள் நியமிக்கப்படும் வரை இவர்கள் பொறுப்பில் இருப்பார்கள் என தமிழக அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

click me!