Veda Nilayam: கை நழுவுகிறதா வேதா இல்லம்? அதிமுகவில் திக்.. திக்.. உச்சக்கட்ட டென்சனில் தீபா..!

Published : Jan 05, 2022, 06:43 AM IST
Veda Nilayam: கை நழுவுகிறதா வேதா இல்லம்? அதிமுகவில் திக்.. திக்.. உச்சக்கட்ட டென்சனில் தீபா..!

சுருக்கம்

வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த  வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, நினைவு இல்லம் அமைப்பது பொதுப்பயன்பாடும் இல்லை. ஏற்கனவே நினைவிடம் உள்ள நிலையில் நினைவு இல்லம் அமைப்பது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்றும் கூறி, வேதா நிலையத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்து செய்து நவம்பர் 24ம் தேதி தீர்ப்பளித்தார்.

வேதா இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவு ரத்துக்கு எதிரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றும் வகையில் முந்தைய அதிமுக அரசு,  வேதா நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பாக உத்தரவுகள் பிறப்பித்தது. அதேபோல, வேதா நிலையத்துக்கு இழப்பீடாக 67 கோடியே 90 லட்சம் ரூபாயும் நீதிமன்றத்தில் டிபாசிட் செய்யப்பட்டது.

வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த  வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, நினைவு இல்லம் அமைப்பது பொதுப்பயன்பாடும் இல்லை. ஏற்கனவே நினைவிடம் உள்ள நிலையில் நினைவு இல்லம் அமைப்பது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்றும் கூறி, வேதா நிலையத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்து செய்து நவம்பர் 24ம் தேதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி, அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை  உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த மாதம் 15ம் தேதி விசாரணையின் போது அதிமுகவுக்கும், போயஸ் கார்டனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதிமுக ஆட்சியின் கொள்கை முடிவு என்பதால் மேல்முறையீடு செய்வதாகவும், எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

இதனையடுத்து , முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து அதிமுக சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அன்றே மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு 20ம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில் வேதா இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவு ரத்துக்கு எதிரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.  இதன் காரணமாக அதிமுகவினரிடையே உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வேதா இல்லத்துக்குள் தீபா சென்ற நிலையில் அவருக்கும் வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது குறித்த அச்சம் நிலவி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!