Rowdy baby surya arrested : இளம் பெண் மீது ஆபாச விமர்சனம்.. ரவுடி பேபி சூர்யாவை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.!

Published : Jan 04, 2022, 10:40 PM ISTUpdated : Jan 04, 2022, 10:42 PM IST
Rowdy baby surya arrested : இளம் பெண் மீது ஆபாச விமர்சனம்.. ரவுடி பேபி சூர்யாவை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.!

சுருக்கம்

அந்த இளம் பெண் நடத்தி வரும் சேனலில் வரும் நிகழ்ச்சி  தொடர்பாக அவருக்கும் ரவுடி பேபி சூர்யாவு தகாத முறையில் ஆபாசமாக விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது.

டிக்டாக் மூலம் பிரபலமடைந்த ரவுடி பேபி சூர்யாவையும் அவருடைய நண்பரையும் கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

மதுரையைச் சேர்ந்தவர் சூர்யா (35). இவர் டிக்டாக் செயலியில் ரவுடி பேபி என்ற பெயரில் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். ஆபாசமாக பதிவுகளை வெளியிட்டதன் மூலம் ரவுடி பேபி சூர்யாவைச் சுற்றி அவ்வப்போது சர்ச்சைகள் சுற்றுவது வழக்கம். சில மாதங்களுக்கு முன்பு இன்னொரு பிரபலத்தை பாலியல் தொழிலுக்கு அழைத்தது தொடர்பான ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. இந்நிலையில் யூடியூப் சேனல் நடத்தி வரும் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் ரவுடி பேபி சூர்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அந்த இளம் பெண் நடத்தி வரும் சேனலில் வரும் நிகழ்ச்சி  தொடர்பாக அவருக்கும் ரவுடி பேபி சூர்யாவு தகாத முறையில் ஆபாசமாக விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அந்த இளம் பெண்ணை ரவுடி பேபி சூர்யாவும் அவருடைய நண்பர் சிக்கா என்ற சிக்கந்தர் (45) ஆகியோர் யூடியூபில் தகாத முறையில் விமர்சித்து பதிவிட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக அந்த இளம் பெண்ணும் அவருடைய கணவரும் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்திருந்தனர். அந்தப் புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரித்தனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம்  உத்தரவின் பேரில், ரவுடி பேபியும் அவருடைய நண்பர் சிக்கந்தரையும் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டர். அவர்கள் இருவர் மீதும்  வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவதூறாக பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரத்தால் மதுரை அருகே பதுங்கியிருந்த ரவுடி பேபி சூர்யாவையும், சிக்கந்தரை கோவை சைபர் கிரைம் போலீசார்  கைது செய்தனர். 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை