
ஜெயலலிதா உடல் நிலை குறித்து வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் அவரது உண்மை நிலையைக் குறிப்பிடவில்லை என்று கூறியுள்ளார் அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி. அப்போது அவர், ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை நடந்து வருவதால், வேறு எதும் பேச முடியாது என்று கூறினார். மேலும்
எங்களது மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையத்திடம் இருந்து சம்மன் வந்துள்ளது. ஆனால், எனக்கு வரவில்லை என்று குறிப்பிட்ட அவர்,
ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப் படும்போதே ஜெயலலிதா உடல் நிலை கவலைக்கு இடமாகத்தான் இருந்தது என்று உறுதிபடக் கூறினார்.
எங்களது மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் விசாரணை ஆணையத்திடம் இருந்து சம்மன் வந்துள்ளது என்று கூறிய ரெட்டி, ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் இருந்ததாக ஏன் ஓர் அறிக்கையை உடனே அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது என்ற தகவலையும் கூறினார்.
மக்கள் அச்சப்படக் கூடாது என்பதற்காகவே, ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் இருந்ததாக உடனடியாக ஒரு மருத்துவ அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டது.. சட்டம் ஒழுங்கு பிரச்னை எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நாங்கள் உண்மை நிலையை அறிக்கையில் குறிப்பிடவில்லை என்று கூறினார் பிரதப் ரெட்டி.