" எதுவாக இருந்தாலும் இன்று மாலைக்குள் சொல்கிறேன் ".. வழிக்கு வந்த ஓபிஎஸ்..???

By Ezhilarasan BabuFirst Published Jun 22, 2022, 2:11 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழு தொடர்பாக இன்று மாலைக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுகவுக்கு இரட்டைத் தலைமேயே நீடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வரும் நிலையில் ஒற்றை தலைமை விவகாரத்தில் இன்று மாலைக்குள் முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.  

அதிமுக பொதுக்குழு தொடர்பாக இன்று மாலைக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுகவுக்கு இரட்டைத் தலைமேயே நீடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வரும் நிலையில் ஒற்றை தலைமை விவகாரத்தில் இன்று மாலைக்குள் முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸெ என அவரது ஆதரவாளர்கள் குழம்பி தவித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதே போல் பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டாம் என யாருக்கும் எந்த கடிதத்தையும் அவர் எழுதவில்லை என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையின்கீழ் அதிமுக இயங்கி வருகிறது ஆனால் நீண்ட நாட்களாகவே கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை தொண்டர்கள் மத்தியில் இருந்து வருகிறது. நாளை பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாகவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஒற்றைத் தலைமை கோரிக்கையே தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். 

ஆனால் இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனால் அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையின்கீழ் பிளவு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் மாறி மாறி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கட்சியில் 80% த்திற்கும் அதிகமான மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த முன்னணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: பொதுக்குழுவுக்கு வாருங்கள்.. பேசி தீர்த்துக் கொள்ளலாம்.. OPS-க்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு..!!

ஆனால் ஓ.பன்னீர் செல்வம் நிர்வாகிகள், மா.செக்கள் ஆதரவின்றி நிராகதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். எனவே எப்படியாவது பொதுக் குழுவை நிறுத்த வேண்டும் என அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பிலிருந்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது, அந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் வரவுள்ளது. 

இதற்கிடையில் பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொள்ள வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இருவருமே பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இருவரும் முடிவு சேர்ந்தே பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் திடீரென பொதுக்குழு கூட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

பொதுக்குழு நடத்துவதால் எந்த பிரச்சினையும் இல்லை, அப்படி பிரச்சினை  என்றால் பொதுக்குழுவில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம், எனவே ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நீங்கள் பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அளவிற்கு சூழ்நிலை இல்லை என எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் திட்டமிட்டபடி நாளை பொதுக்குழு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்து வருகிறது.

எனவே செய்வதறியாது கையறு நிலையில் உள்ள ஓ பன்னீர்செல்வம் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை இன்று பிற்பகல் வர உள்ள நிலையில் எதுவாக இருந்தாலும் இன்று மாலை தனது முடிவை தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார். இதுவரை பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டாம் என  யாருக்கும் எந்த கடிதத்தையும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து எழுதப்படவில்லை என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் ரொம்ப பிஸிங்க.. எடப்பாடிதான் எங்க தலைவர்.. பன்னீரை பயங்கரமா பங்கம் செய்த நடிகை விந்தியா..

பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியதாக தகவல் பரவிய நிலையில் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளனர். எதுவாக இருந்தாலும் இன்று மாலைக்குள் தனது முடிவை தெரிவிக்கிறேன் என அவர் கூறியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவலாக பார்க்கப்படுகிறது. 

 

click me!