முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!!

By Raghupati R  |  First Published Jan 20, 2022, 7:55 AM IST

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் என 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.


வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, தருமபுரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

Tap to resize

Latest Videos

கேபி அன்பழகன் தனது குடும்பத்தினர் பெயர்களில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும், சொத்துக்குவிப்பு தொடர்பாக கேபி அன்பழகனின் மனைவி, 2 மகன்கள், மருமகள் உள்ளிட்டோர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுத்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ். பி வேலுமணி, தங்கமணி, கே. சி வீரமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

click me!