முதல்வருடன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி திடீர் சந்திப்பு... கைதாகிறாரா எஸ்.பி.வேலுமணி?

By vinoth kumarFirst Published Aug 10, 2021, 6:35 PM IST
Highlights

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன், ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத்துறை டிஜிபி கந்தசாமி சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன், ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத்துறை டிஜிபி கந்தசாமி சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. அதுவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில் எஸ்.பி.வேலுமணி தான் நம்பர் 2ஆக இருந்தார். இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பாக இன்று லஞ்ச ஒழிப்பு துறை தமிழகம் முழுவதும் அவருக்கு சொந்தமான 60 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த சோதனையில் எஸ்.பி.வேலுமணி மோசடியில் ஈடுபட்டதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 17  பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இதனால், எஸ்.பி.வேலுமணி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது.  

இந்நிலையில், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத் துறை டிஜிபி கந்தசாமி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்பான சோதனை குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!