மதுரை: ஆர்டிஓ., கூட்டத்தில் பங்கேற்றவர் மீது பைலை தூக்கி எறிந்து ஆவேசம்.! ஊழல் வீடியோ இருப்பதாக குற்றச்சாட்டு!

By T BalamurukanFirst Published Aug 12, 2020, 12:54 AM IST
Highlights

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்குவாரியை மூடக்கோரி நடந்த பேச்சுவார்த்தையின்போது, அதிகாரி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த கிராம பிரதிநிதியை நோக்கி கோட்டாட்சியர் பைல்களை வீசிய எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்குவாரியை மூடக்கோரி நடந்த பேச்சுவார்த்தையின்போது, அதிகாரி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த கிராம பிரதிநிதியை நோக்கிஆர்டிஓ பைல்களை வீசிய எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கருவேலம்பட்டி கிராமத்தில் அதிமுக பிரமுகருக்குச் சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அங்கு வெடி போடுவதாலும், கல் உடைக்கும் எந்திரத்தில் இருந்து வெளியேறும் தூசியாலும் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் பாதிக்கப்படுவதோடு, மக்களுக்கு சுவாசக் கோளாறுகளும் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையடுத்து, கல் குவாரியை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததால், கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. திருமங்கலத்தில் ஆர்டிஓ சவுந்தர்யா தலைமையில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படாத நிலையில், ஆர்டிஓ சவுந்தர்யா ஒருதலைபட்சமாக செயல்படுவதாக, மக்கள் பாதை அமைப்பை சேர்ந்த  ஒருவர் ஆர்டிஓ மற்றும் அமைச்சர் ஒருவருக்கு நேரடியாக தொடர்பு இருப்பதாகவும் அதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் ஆத்திரமடைந்த ஆர்டிஒ சவுந்தர்யா, தன் மீது குற்றம் சாட்டியவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை நோக்கி பைல்களையும் வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டார். வீடியோ ஆதாரத்தை நிருபிக்க முடியாததால் அந்த நபர் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து, போலீசார் தலையிட்டு ஆர்டிஒ மீது குற்றம் சாட்டிய நபரை, பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேற்றினர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆர்டிஓ தெரிவித்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள், கல்குவாரியை மூடும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனக் கூறி கலைந்து சென்றனர்.
 

click me!