அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 69வது பிறந்தநாளையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதலையடுத்து பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையமும் எடப்பாடியை பொதுச்செயலாளாரக அங்கீகரித்துள்ளது. இதனையடுத்து அவரது பிறந்தநாளை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக அம்மா பேரவையின் சார்பில், எடப்பாடியார் பல்லாண்டு காலம் வாழவும், மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி அமையவும் அறுபடை வீட்டின் கடைசி வீடான பழமுதிர் சோலையில் உள்ள முருகனுக்கு எடப்பாடியார் பெயர் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
இபிஎஸ்க்கு அண்ணாமலை வாழ்த்து
இதனைத் தொடர்ந்து தங்க தேரினை இழுத்து, பொதுமக்களுக்கு அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். எடப்பாடி பழனிசாமி பிறந்தாளையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வாழ்த்து செய்தியில், தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமாகிய எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
<
தமிழக முன்னாள் முதலமைச்சரும் பொதுச்செயலாளருமாகிய திரு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு அவர்கள், நல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும், மக்கள் பணிகளை தொடர இறைவனை வேண்டுகிறேன்.
p>
எடப்பாடி பழனிசாமி அவர்கள், நல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும், மக்கள் பணிகளை தொடர இறைவனை வேண்டுவதாக தெரிவித்துள்ளார். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை சமூகவலைதளம் மூலமாகவும், தொலைபேசிமூலமாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்